பா. ரஞ்சித், வெற்றிமாறன் வளர்ச்சிக்கு பிறகு தான் சினிமா தளர்ச்சி அடைந்தது: பிரவீன் காந்தி
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் ரஞ்சித் நடித்த ’கவுண்டம்பாளையம்’ என்ற திரைப்படத்தின் புரமோஷன் விழாவில் பேசிய இயக்குனர் பிரவீன் காந்தி, ‘பா ரஞ்சித், வெற்றிமாறன் வளர்ச்சிக்கு பிறகுதான் சினிமா தளர்ச்சி அடைந்தது என்று இயக்குனர் பிரவீன் காந்தி ஆவேசமாக பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விழாவில் அவர் மேலும் பேசியதாவது:
ஜாதி படம் எடுப்பவர்களுக்கு எதிராக நான் எப்பொழுதுமே பேசி வருகிறேன், ஜாதியை சினிமாவில் சொல்லவே கூடாது, தியேட்டரில் எந்த சீட்டில் எந்த சாதிக்காரன் உட்கார்ந்து இருக்கிறான் என்று யாருக்குமே தெரியாது, பா. ரஞ்சித், வெற்றி மாறன் இன்னும் ஒரு சில டைரக்டர்கள் வளர்ச்சி கண்டதற்கு பிறகுதான் சினிமா தளர்ச்சி ஆகிவிட்டது.
ஒரு திரைப்படத்தை சந்தோஷமாக பார்த்து எல்லோரும் சேர்ந்து விசில் அடிக்கிறோம், எனவே ஜாதியை சினிமாவில் சொல்லவே கூடாது ,சினிமாவில் ஜாதியை சொல்பவர் சமுதாயத்தில் இருந்து ஒதுக்கப்பட வேண்டியவன் என்பது தான் என்னுடைய கொள்கை.
ஹேப்பி ஸ்ட்ரீட் என்ற நிகழ்ச்சி நடந்தபோது கலாச்சாரம் சீர்கெடுகிறது என்று முதலில் குரல் கொடுத்தவர் தான் நடிகர் ரஞ்சித். அதன் பிறகு தான் அந்த நிகழ்ச்சி குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டது. நடிகர் ரஞ்சித்துக்கு ’எனது சகோதரர் எதிர்காலத்தில் கெட்டுப் போய்ப் கூடாது என்ற எண்ணம் இருக்கிறது, என்னுடைய கலாச்சாரத்தை தூக்கிப் பிடிக்க நான் குரல் கொடுப்பேன் என்ற ரஞ்சித் நிச்சயமாக ஒரு நல்ல படம் எடுத்து இருப்பார் என்று நம்பி தான் நான் இந்த படத்தின் நிகழ்ச்சிக்கு வந்துள்ளேன் என்ற பிரவீன் காந்தி கூறினார்.
மேலும் இந்த படத்தின் ஜாதியின் டைட்டில் இருந்தாலும் இந்த படத்தில் நல்ல கருத்துக்கள் சொல்லக்கூடிய படமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். இறைவனின் சூத்திரத்தை அறிந்தவன் சூத்திரன், பிரம்மத்தை அறிந்தவன் பிராமணன் என்று தான் நாம் வைத்திருந்தோம், ஆனால் இந்தியாவிற்கு படை எடுத்து வந்தவர்கள் தான் அதை மாற்றி சூத்திரர் என்று இழிவாக பேசுகின்றனர் என்றும் அவர் ஆவேசமாக கூறினார்.
”பா. ரஞ்சித், வெற்றிமாறன் உள்ளிட்ட சில இயக்குனர்கள் , வளர்ச்சி கண்டதற்கு பிறகு தான் சினிமா தளர்ச்சி அடைந்து விட்டது”... இயக்குனர் பிரவீன் காந்தி ஆவேசம்#Chennai #DirectorPerarasu #ActorRanjith #Kavundampalayam #PolimerNews #PraveenGandhi pic.twitter.com/ZGesozL0jO
— Polimer News (@polimernews) May 11, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments