இணையத்தை கலக்கும் பார்த்திபனின் பீப் பாடல்
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில நாட்களாக சிம்புவின் பீப் பாடல் தமிழகத்தையே பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போது புதியதாக இன்னும் ஒரு பீப் பாடல் வெளிவந்துள்ளது. இந்த பாடலை வெளியிட்டவர் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன்.
இதுகுறித்து பார்த்திபன் கூறியபோது, “ஒரு சராசரி மனிதனாக வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகள் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்தேன். ஒரு வீட்டில் துக்கம் நடந்தால் கூட, அத்துக்கத்தை மறக்க சில நாட்களில் ஏதாவது நல்ல காரியம் ஒன்றை நடத்துவார்கள். அதே போல் சென்னையும் மீண்டும் பழைய நிலைமைக்கு வரலாமே என்று ஒரு பாடல் பண்ணலாம் என தோன்றியது. அப்பாடலை நான் எழுத சத்யா இசையமைத்தார். தற்போது பீப்` பாடல் தமிழகத்தில் பரபரப்பாக இருப்பதால் இப்பாடலை பீ பீ` என்று தொடங்குவது போல எழுதினேன்.
இப்பாடலில் வெள்ள பாதிப்பின்போது உதவிய தன்னார்வலர்களைத்தான் ஆடவைத்தேன். அவர்களோடு சமுத்திரக்கனி, மயில்சாமி ஆகியோரும் பங்கேற்றுள்ளனர். துயரப்பருப்பு, கவலைப்பருப்பு என பருப்பில் புதிய வகைகளை அறிமுகப்படுத்தி இருக்கிறேன். மக்களிடையே இருக்கும் மனிதநேயத்தை வெளியே காட்ட வேண்டும் என்பது தான் இப்பாடலின் நோக்கமாகும்.
பார்த்திபனின் இந்த பீப் பாடல் இணையதளங்களில் மிக வேகமாக பரவி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com