ஒரே ஒரு சூப்பர் ஸ்டார்..அது ரஜினி மட்டுமே. பிரபல இயக்குனர் கருத்து

  • IndiaGlitz, [Thursday,July 21 2016]

அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் யாருக்கு என்று ஒருசில ஊடகங்களும், ரசிகர்களும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து கொண்டிருக்கும் நிலையில் திரைத்துறையில் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார், அவர் ரஜினிகாந்த் மட்டுமே என பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் பிரதாப் போத்தன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
பஸ் கண்டக்டராக ஆரம்பித்த அவரது பயணம் தற்போது அவரது முகம் விமானத்தில் பதிவு செய்யப்படும் அளவுக்கு உயர்ந்துள்ளது. விக் வைத்து கொண்டு சினிமாவில் தோற்றமளித்தாலும், விக் இல்லாமல் எளிமையாக இருந்தாலும் அவரை ரசிகர்கள் கடவுளாக பார்க்கின்றனர்.
கேமிரா அவரையும், அவர் கேமிராவையும் நேசிப்பதால் கிடைக்கும் ரிசல்ட்டில் மேஜிக் ஏற்படுகிறது. பிரமாண்டமான தயாரிப்பும், புரமோஷனும் செய்யப்பட்டுள்ள 'கபாலி' நிச்சயம் இதுவரை இல்லாத, இனிமேலும் முறியடிக்க முடியாத வசூல் சாதனையை ஏற்படுத்தும்.
ரஜினியை போல ஒரு மிகப்பெரிய நடிகர், மனிதர் இனிமேல் தோன்ற வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன்.அப்படியே தோன்றினாலும் அதற்கு மிக அதிகமான காலம் தேவைப்படும்.