பிரதாப் போத்தனின் 31 வயது மகள் யார் தெரியுமா? இந்த துறையில் இவர் பிரபலமாம்!
- IndiaGlitz, [Saturday,July 16 2022]
தமிழ் திரையுலகின் சீனியர் நடிகர் மற்றும் இயக்குனர் பிரதாப் போத்தன் நேற்று உடல் நலக் குறைவு காரணமாக காலமானதை அடுத்து அவருக்கு ஒட்டுமொத்த திரையுலகமும் இரங்கல் தெரிவித்தது. இந்த நிலையில் அவருடைய 31 வயது மகள் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
பள்ளி, கல்லூரி படிக்கும் போதே நாடகங்களில் நடித்த பிரதாப் போத்தன் தனது சகோதரர் ஹரி ஒரு சினிமா தயாரிப்பாளர் என்பதால் அவருடைய நண்பனான இயக்குனர் பரதனின் அறிமுகம் கிடைத்தது. அதன் மூலம் பரதன் இயக்கிய ஒரு மலையாள படத்தில் நடிகராக பிரதாப் போத்தன் அறிமுகமானார்.
முதன்முதலில் பிரதாப் போத்தனுக்கு ஹீரோ வாய்ப்பு கொடுத்தது இயக்குனர் பாலுமகேந்திரா தான். அவர் இயக்கிய ’அழியாத கோலங்கள்’ படத்தில் ஹீரோ வாய்ப்பு கொடுத்ததை அடுத்து அவர் அடுத்தடுத்து ’மூடுபனி’ உள்பட பல படங்களில் வாய்ப்பு கொடுத்தார்.
இந்த நிலையில் கடந்த 1985ஆம் ஆண்டு நடிகை ராதிகாவை திருமணம் செய்த பிரதாப் போத்தன் ஒரே ஆண்டில் அவரை விவாகரத்து செய்தார். அதன் பின்னர் 1990 ஆம் ஆண்டு அமலா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு கேயா என்ற மகள் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பிரதாப் போத்தன் நேற்று உடல்நலக்குறைவால் காலமான நிலையில் அவருடைய மகளின் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. பெங்களூரில் செட்டில் ஆகிவிட்ட கேயா கலைத்துறையில் குறிப்பாக இசைத் துறையில் ஆர்வம் மிக்கவர். இவர் பல பாடல்களை எழுதி பாடியுள்ளதோடு ஒரு இசைக்குழுவையும் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கேயே தனது சமூக வலைதளங்களில் தனது தந்தையுடன் இருக்கும் சில புகைப்படங்களை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர், இயக்குநர் பிரதாப் போத்தன் கடைசியாக குஷ்பு தயாரிப்பில் சுந்தர் சி இயக்கிய ’காபி வித் காதல்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.