பிரசாந்த் நடித்த 'சாஹசம்' படத்தின் ஆடியோ ரிலீஸ் தேதி

  • IndiaGlitz, [Tuesday,July 21 2015]

1990கள் மற்றும் 2000ஆம் ஆண்டுகளில் பல வெற்றிப்படங்களை கொடுத்த நடிகர் பிரசாந்த், நீண்ட இடைவெளிக்கு பின்னர் 'சாஹசம்' படத்தின் மூலம் ரீ எண்ட்ரி ஆகிறார். அவரது தந்தை தியாகராஜன் தயாரித்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி மலேசியாவில் நடைபெறவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இரவு ஏழு மணி முதல் ஒன்பது வரை நடைபெறவுள்ள இந்த விழாவில் படத்தின் இசையமைப்பாளர் எஸ்தமன் உள்பட நாசர், தம்பி ராமையா, ரோபோ சங்கர், ஜான்விஜய் போன்ற பலர் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த விழாவின் தொகுப்பாளராக டிடி என்று கூறப்படும் திவ்யதர்ஷினி கலந்து கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த படத்தின் பாடல்களை மதன்கார்க்கி மற்றும் நா.முத்துக்குமார் ஆகியோர் எழுதியுள்ளனர். பிரசாந்த், அமந்தா, அபீதா, நாசர், சோனு சூட், தம்பி ராமையா, தேவதர்ஷினி, எம்.எஸ்.பாஸ்கர், ஜான் விஜய் உள்பட பலர் நடித்திருக்கும் இந்த படத்தை அருண் ராஜ்வர்மா என்பவர் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன அல்லு அர்ஜூன், இலியானா நடித்த ஜுலை என்ற படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா முடிந்தவுடன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என படக்குழுவினர் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

More News

ஒரு வாரம் முன்னதாக அருள்நிதியின் போலீஸ் படம் ரிலீஸ்?

டிமாண்ட்டி காலனி' வெற்றிப்படத்தை அடுத்து அருள்நிதி நடித்த நகைச்சுவை படமான 'நாலு போலீஸும் நல்லா இருந்தா ஊரும்'

இன்று பிறந்த நாளை கொண்டாடும் அஜீத்-விஜய் இயக்குனர்

கடந்த 1999ஆம் ஆண்டு அஜீத் நடித்த 'வாலி' மற்றும் அதற்கு அடுத்த ஆண்டே விஜய் நடித்த 'குஷி' என்ற இரண்டு சுப்பர் ஹிட் படத்துடன் திரையுலக பயணத்தை ஆரம்பித்த...

'தலைவா' படத்திற்கு பின்னர் மீண்டும் இணைந்த விஜய்-அமலா

இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கிய 'தலைவா' படத்தில் விஜய்க்கு ஜோடியாக அமலாபால் நடித்திருந்தார். இந்த படத்திற்கு பின்னர் இயக்குனர் விஜய்யை திருமணம்...

கமல், ரஜினியை கன்னட சூப்பர் ஸ்டார் சந்தித்தது ஏன்?

கன்னட திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும், நடிகர் சிவராஜ்குமார் கோலிவுட் நடிகர்களிடம் அவ்வப்போது தொடர்பில் இருப்பார்...

'மருதநாயகத்திற்கு வழிகாட்டுகிறதா பாகுபலி?

இந்தியாவின் மாபெரும் பட்ஜெட் படமான 'பாகுபலி' திரைப்படம் இரண்டாவது வாரமாக வெற்றிகரமாக நல்ல வசூலுடன் ஓடிக்கொண்டிருக்கின்றது...