பிரசாந்த் நடித்த 'சாஹசம்' படத்தின் ஆடியோ ரிலீஸ் தேதி
Send us your feedback to audioarticles@vaarta.com
1990கள் மற்றும் 2000ஆம் ஆண்டுகளில் பல வெற்றிப்படங்களை கொடுத்த நடிகர் பிரசாந்த், நீண்ட இடைவெளிக்கு பின்னர் 'சாஹசம்' படத்தின் மூலம் ரீ எண்ட்ரி ஆகிறார். அவரது தந்தை தியாகராஜன் தயாரித்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி மலேசியாவில் நடைபெறவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இரவு ஏழு மணி முதல் ஒன்பது வரை நடைபெறவுள்ள இந்த விழாவில் படத்தின் இசையமைப்பாளர் எஸ்தமன் உள்பட நாசர், தம்பி ராமையா, ரோபோ சங்கர், ஜான்விஜய் போன்ற பலர் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த விழாவின் தொகுப்பாளராக டிடி என்று கூறப்படும் திவ்யதர்ஷினி கலந்து கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் பாடல்களை மதன்கார்க்கி மற்றும் நா.முத்துக்குமார் ஆகியோர் எழுதியுள்ளனர். பிரசாந்த், அமந்தா, அபீதா, நாசர், சோனு சூட், தம்பி ராமையா, தேவதர்ஷினி, எம்.எஸ்.பாஸ்கர், ஜான் விஜய் உள்பட பலர் நடித்திருக்கும் இந்த படத்தை அருண் ராஜ்வர்மா என்பவர் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன அல்லு அர்ஜூன், இலியானா நடித்த ஜுலை என்ற படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா முடிந்தவுடன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என படக்குழுவினர் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com