பிரசாந்தின் 'சாஹசம்' படத்தின் சென்சார் விபரங்கள்

  • IndiaGlitz, [Saturday,November 07 2015]

கடந்த 90கள் மற்றும் 2000ஆம் ஆண்டுகளில் பல சூப்பர் ஹிட் கொடுத்த முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் பிரசாந்த்துக்கு கடந்த 2011ஆம் ஆண்டு மம்பட்டியான் மற்றும் கலைஞரின் 'பொன்னர் சங்கர்' ஆகிய படங்களுக்கு பின்னர் வேறு படங்கள் எதுவும் வெளிவரவில்லை. இந்நிலையில் நான்கு வருடங்கள் கழித்து மீண்டும் அவருடைய படம் ஒன்று வெளிவர ஆயத்தமாகி வருகிறது.

இயக்குனர் அருண் ராஜ்வர்மா இயக்கத்தில் கடந்த சில மாதங்களாக உருவாகி வந்த 'சாஹசம்' படத்தின் மூலம்தான் பிரசாந்த் கோலிவுட்டில் மீண்டும் ரீ எண்ட்ரி ஆகிறார். இந்த படத்தில் பிரசாந்த், அமந்தா, அபிதா, நாசர், தம்பி ராமையா, தேவதர்ஷினி உள்பட பலர் நடித்துள்ளனர். எஸ்.தமன் இசையமைத்துள்ள இந்த படத்தை பிரசாந்தின் தந்தை தியாகராஜன் தயாரித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முடிவடைந்தது.

இந்நிலையில் இந்த படம் நேற்று சென்சார் செய்யப்பட்டது. இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யூ' சர்டிபிகேட் அளித்துள்ளனர். 134 நிமிடங்கள் ஓடும் இந்த படம் அல்லு அர்ஜூன் நடிப்பில் தெலுங்கில் சூப்பர் ஹிட் அடைந்த 'Julaiyi' என்ற படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் சிவகார்த்திகேயன் படப்பிடிப்பு

சிவகார்த்திகேயன் நடித்து முடித்த 'ரஜினிமுருகன்' ரிலீஸ் குறித்து எந்தவித அதிகாரபூர்வ தகவல்களும் வெளிவராத நிலையில் அவருடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கிவிட்டது...

'வேதாளம்' வெற்றிக்காக அஜீத்தின் ஆலய விசிட்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த தன்னுடைய ஒவ்வொரு படத்தின் ரிலீஸுக்கு முன்னர் திருப்பதி சென்று ஏழுமலையானை...

அமெரிக்க தொழில்நுட்பத்தை இந்தியா கொண்டு வரும் கமல்

உலக நாயகன் கமல்ஹாசன் இன்று தனது 61வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி வருகிறார். அவருக்கு திரையுலகினர் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்...

அஜீத்தின் 'வேதாளம்' - ஒரு முன்னோட்டம்

'வீரம்' படத்தை முடித்தவுடன் இயக்குனர் சிவாவின் மீது அதீத நம்பிக்கை வைத்த அஜீத், 'நாம் இருவரும் இணைந்து மீண்டும் படம் பண்ணலாம்' என வாக்கு கொடுத்தாராம்.....

'சிங்கம் 3' படப்பிடிப்பு ஆரம்பமாகும் தேதி?

சூர்யா-ஹரி கூட்டணியில் வெளியான 'சிங்கம்', சிங்கம் 2' ஆகிய திரைப்படங்கள் மாபெரும் வெற்றியை பெற்றதை அடுத்து 'சிங்கம் 3'....