கமல்-ரஜினி இணைப்பு: பின்னணியில் பிரசாந்த் கிஷோரா?
- IndiaGlitz, [Friday,November 22 2019]
உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் தமிழக அரசியல் களத்தில் இறங்கி உள்ளதால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக, திமுக கூட்டணியை தவிர கமல்-ரஜினி இணைப்பில் ஒரு மெகா கூட்டணி ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது
இந்த நிலையில் கமல் மற்றும் ரஜினி ஆகிய இருவரும் தனித்தனியாக அரசியல் செய்வார்கள் என்று கடந்த வாரம் வரை கூறப்பட்டு வந்த நிலையில் திடீரென தற்போது இருவரும் இணைந்து செயல்படுவார்கள் என்ற ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு பின்னணியில் அரசியல்வாதிகளுக்கு ஆலோசனை கூறும் பிரசாந்த் கிஷோர் இருப்பதாக கூறப்படுகிறது
ஏற்கனவே கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவரும் தனித்தனியாக பிரசாந்த் கிஷோரை அவரை அணுகி தங்களுக்கு அரசியல் ஆலோசனை கூறுமாறு கேட்டுக் கொண்டதாக ஒரு செய்தி பரவி வந்தது. இந்த நிலையில் இருவரும் இணைந்தால் மட்டுமே தமிழகத்தில் மாற்றம் ஏற்படுத்த முடியும் என்று பிரசாந்த் கிஷோர் கூறி இருக்கலாம் என்றும், அதன் காரணமாக இருவரும் தற்போது இணைய முடிவு செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது
கமல்-ரஜினி இணைப்பு குறித்த செய்திகளுக்கு ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் தந்து கொண்டிருப்பதில் இருந்தே இந்த கூட்டணிக்கு வலுவான கூட்டணி என்பதை நிரூபிக்கின்றது என்றும், அது மட்டுமின்றி அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் இந்த கூட்டணியை எதிர்த்து அறிக்கைகள், பேட்டிகள் கொடுத்து வருவதால் இந்த கூட்டணி நிச்சயம் வரும் தேர்தலில் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக அதிமுக மற்றும் திமுக கூட்டணி மட்டுமே மாறி மாறி ஆட்சி புரிந்து கொண்டிருக்கும் நிலையில் அடுத்து வரும் 2021 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் திமுக , அதிமுக கூட்டணியை கமல்-ரஜினி கூட்டணி வீழ்த்துமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்