படப்பிடிப்பின் இடையில் பிரசாந்த்-யோகிபாபு செய்த வேலையை பாருங்கள்: வைரல் வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான ‘அந்தாதூன்’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்கான ’அந்தகன்’ என்ற படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பின் இடைவேளையில் பிரசாந்த் மற்றும் யோகி பாபு கிரிக்கெட் விளையாடிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது
பிரசாந்த், சிம்ரன், யோகி பாபு உள்பட பலர் நடித்து வரும் திரைப்படம் ’அந்தகன்’. தியாகராஜன் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சென்னையில் நடைபெற்று வருகிறது
இந்த நிலையில் இந்த படப்பிடிப்பின் இடைவேளையில் பிரசாந்த், யோகி பாபு உள்பட படக்குழுவினர் கிரிக்கெட் விளையாடும் வீடியோ வைரலாகி வருகிறது. பிரசாந்த் பவுலிங் போட யோகி பாபு பேட்டிங் செய்யும் காட்சிகளும் அந்த வீடியோவில் உள்ளன.
இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் கேஎஸ் ரவிக்குமார், வனிதா விஜயகுமார், சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்து வருகின்றனர் என்பதும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Break Moments @actorprashanth plays cricket during the shooting of @actorthiagaraja directorial #Andhagan with director #ksravikumar @iYogiBabu #Teakadaicinema #NMNews23 #NM pic.twitter.com/zG4Lli34cT
— Nikil Murukan (@onlynikil) April 25, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments