படப்பிடிப்பின் இடையில் பிரசாந்த்-யோகிபாபு செய்த வேலையை பாருங்கள்: வைரல் வீடியோ

  • IndiaGlitz, [Monday,April 26 2021]

பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான ‘அந்தாதூன்’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்கான ’அந்தகன்’ என்ற படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பின் இடைவேளையில் பிரசாந்த் மற்றும் யோகி பாபு கிரிக்கெட் விளையாடிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

பிரசாந்த், சிம்ரன், யோகி பாபு உள்பட பலர் நடித்து வரும் திரைப்படம் ’அந்தகன்’. தியாகராஜன் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சென்னையில் நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் இந்த படப்பிடிப்பின் இடைவேளையில் பிரசாந்த், யோகி பாபு உள்பட படக்குழுவினர் கிரிக்கெட் விளையாடும் வீடியோ வைரலாகி வருகிறது. பிரசாந்த் பவுலிங் போட யோகி பாபு பேட்டிங் செய்யும் காட்சிகளும் அந்த வீடியோவில் உள்ளன.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் கேஎஸ் ரவிக்குமார், வனிதா விஜயகுமார், சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்து வருகின்றனர் என்பதும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

இங்கிலாந்தில் குறைந்த கொரோனா பாதிப்பு....!

இங்கிலாந்தில் 7 மாதங்களில் இல்லாத அளவிற்கு இம்முறை கொரோனா பாதிப்பானது குறைந்துள்ளது.

ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி!

ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு 4 மாதங்களுக்கு மட்டும் அனுமதி அளித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது

இளம் ஜோடிகளுக்கு கொரோனா வார்டில் திருமணம்… விதிமுறை மீறலா இது?

கேரளாவில் இளம்பெண் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மணமகனுக்காக கவச உடை அணிந்து கொரோனா வார்டுக்கே சென்று திருமணம் செய்து கொண்டுள்ளார்.

சென்னை திரும்பியதும் விவேக்கிற்காக விஜய் செய்த செயல் இதுதான்!

தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான விவேக் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீரென மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது மறைவு தமிழ் திரையுலகை மட்டுமின்றி

தமிழக அரசை அனுமதிக்க முடியாது… மீண்டும் நீதிமன்றத்தை நாடிய வேதாந்தா நிறுவனம் !

இந்தியா முழுவதும் நிலவிவரும் ஆக்சிஜன் பற்றாக்குறையைத் தீர்க்க மூடப்பட்டுள்ள தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறந்து ஆக்சிஜன் தயாரிக்க அனுமதிக்க வேண்டும்