close
Choose your channels

பாலிவுட் ரீமேக்கில் இணையும் கவுதம் மேனன் - பிரசாந்த்

Wednesday, August 28, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாலிவுட்டில் சூப்பர்ஹிட் வெற்றி பெற்றதோடு தேசிய விருதையும் பெற்ற 'அந்தாதூன்' என்ற படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் தியாகராஜன் பெற்றுள்ளார் என்பதையும் இந்த படத்தில் டாப்ஸ்டார் பிரசாந்த் நடிக்கவுள்ளார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் இந்த படத்தை ஸ்டைலிஷ் இயக்குனர் கவுதம்மேனன் இயக்கவுள்ளதாக தற்போது செய்தி வெளிவந்துள்ளது. ஏற்கனவே தனுஷின் 'எனை நோக்கி பாயும் தோட்டா' மற்றும் 'துருவ நட்சத்திரம்' ஆகிய படங்களை முடித்துவிட்ட கவுதம் மேனன், தற்போது வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வருண் நடித்து வரும் 'ஜோஸ்வா அத்தியாயம் ஒன்று' என்ற படத்தின் இயக்கி முடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது அவர் பிரசாந்த் படத்தை இயக்குவார் என தெரிகிறது

ஒரு காலத்தில் அஜித், விஜய்க்கு நிகரான வெற்றிப்படங்களை கொடுத்து வந்த பிரசாந்த், கடந்த சில வருடங்களாக திரையுலகில் இருந்து விலகி இருந்தார். இந்த நிலையில் கவுதம் மேனனுடன் கைகோர்த்து மீண்டும் கோலிவுட்டில் வலம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment