சீட் நுனியில் திகில் திரைக்கதை.. பிரசாந்த் சூப்பர் கம்பேக்.. பாசிட்டிவ் விமர்சனத்தில் 'அந்தகன்'..!

  • IndiaGlitz, [Saturday,August 10 2024]

பிரசாந்த், சிம்ரன் நடிப்பில் தியாகராஜன் இயக்கத்தில் உருவான ’அந்தகன்’ திரைப்படம் நேற்று வெளியான நிலையில் இந்த படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் இந்த படம் நிச்சயம் ஒரு வெற்றிப்படம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ரஜினி, கமல், அஜித், விஜய் படங்களை கூட நெகட்டிவ் ஆக விமர்சனம் செய்யும் சிலர் ’அந்தகன்’ படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்துள்ளனர். ஹிந்தியில் வெளியான ’அந்தாதூன்’ என்ற படத்தின் தமிழ் ரீமேக் படமான இந்த திரைப்படத்தில் பிரசாந்த், சிம்ரன், பிரியா ஆனந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படம் பார்க்க வந்த ரசிகர்களை சீட் நுனியில் உட்கார வைத்து ஒரு திகில் அனுபவத்தை கொடுத்துள்ளதாகவும், ஹிந்தியை போலவே இந்த படம் தமிழிலும் வெற்றி பெறும் என்றும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

தியாகராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருவதை அடுத்து முதல் நாள் வசூலும் திருப்திகரமாக இருப்பதாக திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் கூறியுள்ளனர். எனவே பிரசாந்துக்கு இந்த படம் ஒரு சூப்பர் கம்பேக் படம் என்றும் கூறப்பட்டுள்ளது.

பியானோ கலைஞராக விரும்பும் பிரசாந்த், அந்த கலையில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக ரசிகர்களின் பரிதாபத்தை பெற, பார்வையற்றவர் போல் நடிக்கிறார். அப்போது அவர் ஒரு கொலையை பார்த்துவிடும் நிலையில், கொலையாளிகள் பிரசாந்த் கண் பார்வை அற்றவர் தானே என்று கண்டு கொள்ளாமல் இருக்கின்றனர். இதனை அடுத்து என்ன நடக்கிறது என்ற ஒவ்வொரு திகில் காட்சியும் தான் இந்த படத்தின் மீதி கதை என்பது குறிப்பிடத்தக்கது.