பிரசாந்த் நடிக்கும் ‘அந்தகன்’ படத்தில் சூப்பர் சிங்கர் பாடகர்.. வைரல் வீடியோ..!

  • IndiaGlitz, [Sunday,February 26 2023]

பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ என்ற திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக இந்த படத்தின் சிங்கிள் பாடல் ஒன்று சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

சந்தோஷ் நாராயணன் கம்போஸ் செய்த இந்த பாடலை விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட ஆதிக் பாடியுள்ளார். உமாதேவி எழுதிய இந்த மெலடி பாடல் முதல் முறை கேட்கும் போதே அசத்தலாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பிரசாந்த், கார்த்திக், சிம்ரன், பிரியா ஆனந்த், சமுத்திரகனி, ஊர்வசி, யோகி பாபு, கேஎஸ் ரவிக்குமார், வனிதா விஜயகுமார், மனோபாலா, நடிப்பில் உருவாகிய இந்த படத்தை தியாகராஜன் இயக்கியுள்ளார். ரவி யாதவ் ஒளிப்பதிவில், சதீஸ் சூர்யா படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை வி கிரியேஷன்ஸ் நிறுவனம் தமிழகத்தில் ரிலீவ் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

More News

'தேஜாவு' இயக்குனரின் அடுத்த படம்.. ஹீரோ, இசையமைப்பாளர் அறிவிப்பு..!

 அருள்நிதி நடித்த 'தேஜாவு' என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் இயக்குனர் அரவிந்த் சீனிவாசன் இயக்கும் அடுத்த பட அறிவிப்பு வெளியானது.

உன் சிறு அணைப்பில் ஓராயிரம் ஆறுதல் உணர்கிறேன்..! சின்னத்திரை பிரபலத்தின் வளைகாப்பு புகைப்படங்கள்..!

பெரிய திரை நட்சத்திரங்களைப் போலவே தற்போது சின்னத்திரை நட்சத்திரங்களும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகின்றனர் என்பதும் அவர்களது சமூக வலைதளங்களுக்கு மில்லியன் கணக்கில்

ஃபீனிக்ஸ் பறவை போல் மீண்டு வந்த சமந்தா.. குதிரை சவாரி செய்யும் மாஸ் புகைப்படம்..!

 நடிகை சமந்தா கடந்த சில மாதங்களுக்கு முன்னால் மயோசிட்டி சென்ற நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர் இனி திரை உலகில் நடிக்க மாட்டார் என்றும் திரையுலகில் இருந்து விலகிவிடுவார் எ

 சிகப்பு ரோஜாக்கள், ஆளவந்தான், மன்மதன் வரிசையில் ஒரு சைக்கோ படம்:  'பாகீரா' டிரைலர்..!

 சிகப்பு ரோஜாக்கள், ஆளவந்தான், மன்மதன் ஆகிய படங்களில் வரும் ஒரு சைக்கோ தான் இந்த படத்திலும் என்பதை இயக்குனர் அந்த காட்சிகளின் மூலமே டிரைலரில் தெரிவித்து விடுகிறார் என்பதால் இந்த படத்தின்

கெட்டப் போட இத்தனை மணி நேரமா? 'காந்தாரா' குறித்து கோமாளி புகழ்.. வைரல் வீடியோ..!

 குக் வித் கோமாளி நிகழ்ச்சி சீசன் 4 தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் நேற்றைய எபிசோடில் கோமாளிகள் வித்தியாசமான கெட்டப்பில் தோன்றினார்கள்