'நான் என்ன சீரியல் கில்லரா? பிரசாந்த் நடித்த 'அந்தகன்' டீசர்..!

  • IndiaGlitz, [Saturday,July 13 2024]

பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டதாக கூறப்படும் நிலையில் தற்போது தான் இந்த படத்தை ரிலீஸ் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் இன்று ‘அந்தகன்’ படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன் அந்த ட்ரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி கேரக்டரில் பிரசாந்த் நடித்திருக்கும் நிலையில் அவரது கேரக்டரில் உள்ள சஸ்பென்ஸ், அடுத்தடுத்து நடைபெறும் கொலைகள் என இந்த படத்தின் டிரைலர் த்ரில்லாக இருப்பதாக ட்ரைலரை பார்த்த ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அடுத்தடுத்து நடைபெறும் சீரியல் கொலைக்கும் சிம்ரனுக்கும் என்ன சம்பந்தம்? பிரியா ஆனந்த் கேரக்டர் மற்றும் காவல்துறை அதிகாரியாக சமுத்திரக்கனி, வில்லனாக நவரச நாயகன் கார்த்திக் என இந்த படத்தில் பிரபல நட்சத்திரங்கள் பலர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சந்தோஷ் நாராயணன் பின்னணி இசை, தியாகராஜனின் இயக்கம் என இந்த படத்தில் அனைத்து அம்சங்களும் பாசிட்டிவாக இருக்கிறது என்பதும் இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.