close
Choose your channels

பிரசாந்தின் 'அந்தகன்' படத்திற்கு உதவும் தளபதி விஜய்.. சர்ப்ரைஸ் அறிவிப்பு..!

Sunday, July 21, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் புரமோஷனுக்காக தளபதி விஜய் உதவி செய்வது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிரசாந்த் நடிப்பில் அவரது தந்தை தியாகராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அந்தகன்’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி சில ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நாளில் தான் பிரசாந்த் நெருங்கிய உறவினர் விக்ரம் நடிக்கும் ’தங்கலான்’ திரைப்படம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘அந்தகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தளபதி விஜய் கலந்து கொள்வார் என்று கூறப்பட்ட நிலையில் சற்றுமுன் நாளை ‘அந்தகன்’ திரைப்படத்தில் ஒரு சர்ப்ரைஸ் அறிவிப்பு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி இந்த அறிவிப்பில் பிரசாந்த், விஜய் மற்றும் பிரபுதேவா ஆகியோர் இருக்கும் புகைப்படமும் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் ‘அந்தகன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் மற்றும் பிரபுதேவா கலந்து கொள்வார்கள் என்றும், இது குறித்த அறிவிப்பு தான் நாளை வெளியாகும் என்று கூறப்படுகிறது.

தளபதி விஜய் நடித்த ’கோட்’ திரைப்படத்தில் பிரசாந்த் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்த போதே இருவருக்கும் நெருக்கமான நட்பு ஏற்பட்டதாகவும் அந்த நட்பின் அடிப்படையில் தான் ‘அந்தகன்’ படத்தில் புரமோஷனில் கலந்து கொள்ள விஜய் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. ’அந்தகன்’ படத்தில் அந்த சர்ப்ரைஸ் அறிவிப்பு என்னவாக இருக்கும் என்பதை நாளை வரை பொறுத்து இருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment