அடி அடி அடி ஓங்கி அடிச்சிடுடா.. தளபதி விஜய் வெளியிட்ட 'அந்தகன்' ஆன்ந்தம்..!

  • IndiaGlitz, [Wednesday,July 24 2024]

பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடலை தளபதி விஜய் வெளியிடுவதாக ஏற்கனவே செய்தி வெளியானது. இந்த நிலையில் அந்த பாடல் தற்போது வெளிவந்துள்ள நிலையில் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

டாப் ஸ்டார் பிரசாந்த், சிம்ரன், பிரியா ஆனந்த், கார்த்திக், சமுத்திரகனி, யோகி பாபு, ஊர்வசி, கேஎஸ் ரவிக்குமார், வனிதா விஜயகுமார் லீலா சாம்சன், மனோபாலா உள்ளிட்ட பலர் நடிப்பில் தியாகராஜன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘அந்தகன்’.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பே தயாரான நிலையில் தற்போது தான் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் புரமோஷன் பணிகளும் நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்றுமுன் ‘அந்தகன்’ ஆன்ந்தம் என்ற ப்ரோமோ பாடல் வெளியாகி உள்ள நிலையில் இந்த பாடலை தளபதி விஜய் வெளியிட்ட காட்சிகளுடன் பாடல் தொடங்குகிறது. இந்த பாடலை அனிருத் மற்றும் விஜய் சேதுபதி பாடி இருக்க உமாதேவி, ஏகாதேசி ஆகியோர் எழுதியுள்ளனர். இந்த பாடல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த பாடலின் முதல் சில வரிகள் இதோ:

வானம் மேல ஏணி போட்டு
சிங்கம் போல சிகரம் ஏறுடா
நீ ஹேப்பியா இருப்பதும் ஒன்னும்
பெரிய மேட்டரில்லை
சொர்க்கம் வரும் தியேட்டரில்

அட கடல் அலை உன்னை எவன் தடுப்பா
புது சரித்திரம் அதை படைச்சிடு
விடுகதை எல்லாம் விடை கொடுத்துடு
அடி அடி அடி ஓங்கி அடிச்சிடுடா

 

More News

'விடாமுயற்சி' படப்பிடிப்பு முடிந்து சென்னை கூட வரவில்லை.. அதற்குள் ரூ.9 கோடி செலவு செய்த அஜித்..!

கடந்த சில வாரங்களாக அஜித் நடித்த 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடந்தது என்பதும் அஜித், அர்ஜுன், ஆரவ், த்ரிஷா உள்பட பலர் இந்த படப்பிடிப்பில்

திருமணமாகி ஒரு மாதம்.. நீச்சல் குளத்தில் ஹனிமூன் கொண்டாடும் பிரபல நடிகை..!

பிரபல நடிகைக்கு கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதி திருமணம் ஆன நிலையில் அவர்களுக்கு திருமணம் ஆகி ஒரு மாதம் ஆனதை அடுத்து தாய்லாந்தில் நீச்சல் குளத்தில் ஹனிமூன் கொண்டாடிய

2 ஆண்டுகளுக்கு பின் ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் பிரபல இயக்குனர்களின் படங்கள்.. இந்த முறை வெற்றி யாருக்கு?

பிரபல இயக்குனர்களின் படங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீசான நிலையில் அதே இயக்குனர்களின் அடுத்த படங்கள் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக

இன்னும் ஒரு வாரம் தான்.. 9 வருடங்களுக்கு பின் விஜய்யுடன் இணைந்த ஸ்ருதிஹாசன்..!

தளபதி விஜய் நடித்த 'கோட்' திரைப்படத்தில் ஸ்ருதிஹாசன் ஒரு பாடல் பாடி இருக்கும் நிலையில் இந்த பாடல் அடுத்த வாரம் வெளியாக இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

ரஜினியின் 'கூலி' படத்தில் தனுஷின் 'குபேரா' நடிகர்.. வேற லெவலில் யோசிக்கும் லோகேஷ்..!

தனுஷ் நடித்து வரும் 'குபேரா' திரைப்படத்தில் நடிக்கும் பிரபல நடிகர், ரஜினியின் 'கூலி' படத்தில் இணைய இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.