பிரசாந்தின் 'அந்தகன்' ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம்.. புத்திசாலித்தனமான முடிவா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ திரைப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என்று கடந்த சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விக்ரம் மற்றும் பிரசாந்த் ஆகிய இருவரும் நெருங்கிய உறவினர்கள் என்ற நிலையில் விக்ரம் நடித்த ’தங்கலான்’ ரிலீஸ் ஆகும் ஆகஸ்ட் 15ஆம் தேதி, பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ திரைப்படமும் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் சற்று முன் ‘அந்தகன்’ திரைப்படம் ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 15ஆம் தேதி ஏற்கனவே ’டிமான்டி காலனி 2’ ’தங்கலான்’ மற்றும் ’ரகு தாத்தா’ ஆகிய மூன்று படங்கள் வெளியாவதால் போதுமான தியேட்டர்கள் கிடைக்காது என்ற காரணத்தினால் புத்திசாலித்தனமாக ஒரு வாரத்துக்கு முன்பே படத்தை ரிலீஸ் செய்ய பிரசாந்த் மற்றும் தியாகராஜன் திட்டமிட்டு அறிவிப்பையும் வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரசாந்த், சிம்ரன், கார்த்திக், பிரியா ஆனந்த், ஊர்வசி, யோகி பாபு, கேஎஸ் ரவிக்குமார், வனிதா விஜயகுமார், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.
தியாகராஜன் இயக்கி உள்ள இந்த படம் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே நடித்த ’அந்தாதூன்’ என்ற ஹிந்தி படத்தின் ரீமேக் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Get Ready for an unforgettable journey! 🎬 #Andhagan hits big screen on August 09th #Andhaganthepianist #AndhaganfromAug09th @actorthiagaraja @actorprashanth @SimranbaggaOffc @PriyaAnand @thondankani @iYogiBabu #Andhagan @sidsriram @Music_Santhosh @Lyricist_Vivek… pic.twitter.com/Q7caK2e9Gu
— Prashanth (@actorprashanth) July 31, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments