பிரசாந்தின் 'அந்தகன்' படத்தின் இயக்குனர் திடீர் மாற்றம்: யார் இயக்குனர்?
Send us your feedback to audioarticles@vaarta.com
பாலிவுட்டில் மிகப் பெரிய வெற்றி பெற்ற ’அந்தாதூன்’ என்ற திரைப் படத்தின் தமிழ் ரீமேக் திரைப்படத்தை தியாகராஜன் தனது மகன் பிரசாந்த் நடிப்பில் தயாரிக்க இருந்தார் என்றும் இந்த திரைப்படத்திற்கு ;அந்தகன்; என்ற டைட்டில் வைக்கப்பட்டது என்பதும் தெரிந்தது
இந்த நிலையில் இந்த படத்தை ‘பொன்மகள் வந்தாள்’ இயக்குனர் ஜேஜே பெடரிக் இயக்கவிருப்பதாகவும், சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.இந்த நிலையில் இன்று இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. மேலும் இந்த படத்தை தியாகராஜனே இயக்கவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் குறித்த அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும் என தெரிகிறது.
நிண்ட இடைவெளிக்கு பின் பிரசாந்த் மற்றும் சிம்ரன் மீண்டும் இணையும் இந்த படத்தில் கார்த்திக், யோகி பாபு, கே எஸ் ரவிக்குமார், உத்தரா மேனன், ஊர்வசி, மனோபாலா உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். இந்த தகவலை பிரசாந்த் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments