ஹேய் பொண்டாட்டி.. திருமண நாளில் மனைவி சினேகாவை கொஞ்சிய பிரசன்னா.. வைரல் புகைப்படங்கள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் பிரசன்னா மற்றும் நடிகை சினேகா திருமணநாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தனது திருமண நாளில் ‘ஹேய் பொண்டாட்டி’ என்று தொடங்கி ஒரு பதிவை பிரசன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த ரொமான்ஸ் பதிவுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.
கடந்த 2012 ஆம் ஆண்டு மே 11ஆம் தேதி நடிகர் பிரசன்னா மற்றும் நடிகை சினேகா திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
‘அச்சமுண்டு அச்சமுண்டு’ என்ற படத்தில் பிரசாந்த், சினேகா இருவரும் இணைந்து நடித்தபோதுதான் காதலிக்க தொடங்கினர் என்பதும் அதன் பிறகு இரு வீட்டாரின் சம்பந்தத்துடன் திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பிரசன்னா - சினேகா திருமணம் முடிந்து 11 வருடங்கள் நிறைவு பெற்றுள்ள நிலையில் திருமண நாளை இந்த நட்சத்திர தம்பதிகள் சிறப்பாக கொண்டாடினார். திருமண நாளை முன்னிட்டு நடிகர் பிரசன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செய்த ரொமான்ஸ் பதிவு இதோ:
ஏய் பொண்டாட்டி இந்த சிறப்பு நாளில் நான் உன்னிடம் சொல்ல விரும்புவது என்னுடைய வாழ்க்கையில் பல திருப்பங்கள் ஏற்பட்டு இருந்தாலும், உன் கையை பிடித்துக் கொண்டு சென்ற நான் நிறைய கற்றுக் கொண்டேன். உன்னுடன் நான் மேற்கொண்ட இந்த பயணத்திற்கு நன்றி உடையவனாக இருப்பேன். நான் எவ்வளவோ கஷ்டங்கள் மற்றும் சவால்களை சந்தித்து இருக்கிறேன், அப்போதெல்லாம் நீ என் பக்கத்தில் இருந்ததால் எந்த கஷ்டமும் என்னை எதுவும் செய்ய முடியவில்லை.
உன்னுடைய அன்பு என்னை வழி நடத்தியது, எனக்கு ஏற்பட்ட இருள் அனைத்தையும் விரட்டும் ஒளி நீயாகும். உன்னை என் துணையாக பெற்றதற்கு நான் மிகவும் நன்றி உடையவனாக இருக்கிறேன், நம் குழந்தைகள் விலை மதிப்புள்ள பரிசுகள், கடவுளின் ஆசிர்வாதத்தால் உன்னுடைய அன்பால் உன்னுடைய புன்னகையால் என் உலகத்தை நீ அற்புதமாக வைத்திருக்கிறாய். உன் கைகளைப் பிடித்துக் கொண்டு தொலைதூர நாடுகளுக்கு, புரியாதை பாதைகளுக்கு செல்ல வேண்டும் என்று விரும்புகிறேன்
என்னை ஒருபோதும் விட்டுக் கொடுக்காத உன் அன்பில் மீண்டும் ஒரு வருடம் கழிந்து உள்ளது. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள், என் அன்பே, என் கண்ணம்மா. ஒவ்வொரு கணத்தையும் ஒவ்வொரு நொடியையும் நாம் சிறப்பாக வாழ்வோம். உன்னை நான் எப்போதும் காதலிக்கிறேன், நம் காதல் வலுவாகவும் உயர்ந்ததாகவும் இருக்கும்’ என்று கூறியுள்ளார்.
மேலும் பின்குறிப்பாக ’நம்மைப் பற்றிய மில்லியன் கணக்கில் வதந்தி வந்தாலும் அந்த வதந்திகள் தவிடு பொடியாக ஆகட்டும் , நாம் நம் வாழ்க்கையை முழுமையாக வாழ்வோம்’ என்று பிரசன்னா தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments