யுவன்ஷங்கர் ராஜா வெளியிட்ட அதிரடி டைட்டில்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒரு திரைப்படத்திற்கு எந்த அளவுக்கு ரசிகர்களிடம் வரவேற்பு இருக்கின்றதோ, அதே அளவு வரவேற்பு தற்போது வெப் சீரீஸ்களுக்கும் இருக்கின்றது என்பதை நாம் அவ்வப்போது பார்த்து வருகின்றோம். குறிப்பாக 'ஆட்டோ சங்கர்' வெப் சீரீஸூக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் பிரபல நடிகர்களும் தற்போது வெப் சீரீஸ் பக்கம் செல்ல ஆரம்பித்துவிட்டனர்.
அந்த வகையில் நடிகர் பிரச்சன்னா நடிக்கும் வெப் சீரிஸ் ஒன்றின் டைட்டில் 'திரவம்' என்று வைக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக்கை இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா சற்றுமுன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த வெப் சீரிஸில் பிரசன்னாவுடன் நடிகை இந்துஜா மற்றும் காளிவெங்கட் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளனர். பிரபல தனியார் தொலைக்காட்சியில் இந்த வெப் சீரிஸ் வரும் 21ஆம் தேதி ஆரம்பமாகவுள்ளது.
Meet Ravi Prakasam.
— Yuvanshankar raja (@thisisysr) May 7, 2019
happy to reveal first look poster of @Prasanna_actor's #Thiravam.
Best wishes to @ArvindKrsna for this project.#ThiravamOnZEE5 Premiering on 21st May.@ZEE5Tamil #COrNeredMan@Actress_Indhuja @kaaliactor #ZEE5Originals pic.twitter.com/JbRFNZpTfd
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com