தனுஷூக்கு இந்த திறமையும் உண்டா? நடிகர் பிரசன்னா வெளியிட்ட ஆச்சரிய வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ், நடிகர் மட்டுமின்றி தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர், பாடகர் என பல்வேறு அவதாரங்களில் ஜொலித்து இருக்கிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அவர் பியானோவில் இசையமைக்கும் வீடியோவை நடிகர் பிரசன்னா தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
நடிகர் தனுஷ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலகினர் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இன்று தனுஷின் பிறந்த நாளையொட்டி அவர் நடித்து வரும் ’வாத்தி’ படத்தின் டீசர் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் நடிகர் தனுஷூக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ள நடிகர் பிரசன்னா அவர் பியானோ வாசிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் தனுஷூக்கு பியானோ வாசிக்கவும்ம் தெரியுமா என ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்புகின்றனர்.
நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியராக இருக்கும் தனுஷ் விரைவில் இசையமைப்பாளராக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Wishing only greater heights and even greater happiness to my dear bro @dhanushkraja ❤️?? and what more beautiful can u share to his fans on his birthday...?? bro don't kill me for sharing this. I kept it too long for just myself ?? pic.twitter.com/jU0eWffhkK
— Prasanna (@Prasanna_actor) July 28, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com