ரசிகரின் கிண்டலுக்கு நடிகர் பிரசன்னாவின் மெச்சூரிட்டியான பதில்
Send us your feedback to audioarticles@vaarta.com
கோலிவுட்டின் இளம் நடிகர்களில் ஒருவராகிய பிரசன்னா தற்போது திரைப்படங்களில் நடித்து வருவது மட்டுமின்றி ஒருசில தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியும் வருகிறார். அந்த வகையில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் 'சொப்பன சுந்தரி' நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்கி வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சமீபத்தில் இந்த நிகழ்ச்சிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 'சொப்பன சுந்தரிகளுக்கும் அதனை தொகுத்து வழங்கிய பிரச்சன்னாவுக்கும் வாழ்த்து தெரிவித்தார்.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சிவகார்த்திகேயன் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தபோது இதே பிரச்சன்னா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருக்கின்றார். தற்போது நிலைமை அப்படியே தலைகீழாக மாறியுள்ளதாக குறிப்பிட்ட ஒரு ரசிகர், 'சிவகார்த்திகேயன் நல்ல தொகுப்பாளராக இருந்ததாகவும், ஆனால் பிரசன்னாவுக்கு அந்த அவ்வளவு திறமை இல்லை என்றும், பிரசன்னாவைத் தொகுப்பாளராகப் பார்ப்பது போரடிப்பதாகவும் கூறினார். அதுமட்டுமின்றி பிரசன்னா ஒரு சுமாரான நடிகர் என்றும், அதிக வெற்றிகளை பார்க்காதவர் என்றும் ஆனால் சிவகார்த்திகேயன் தொகுப்பாளராக மட்டுமின்றி நடிகராகவும் வெற்றி பெற்றவர் என்றும் கூறியிருந்தார்
தன்னையும் சிவகார்த்திகேயனையும் ஒப்பிட்ட ரசிகருக்கு பிரச்சன்னா கூறிய பதில் இதுதான்: நான் தொகுத்து வழங்குவது போரடிக்கிறது என்றால், அப்படியே இருக்கட்டும். நான் இந்த வேலையை முழுநேரமாக செய்யவில்லை. நான் சுமாரான நடிகர் என்றால், என்னை மேம்படுத்திக் கொள்ள இன்னும் காலம் உள்ளது. அதேபோல் நான் அதிக வெற்றிகளைப் பார்க்கவில்லை என்றாலும் வெற்றிபெற எனக்கு இன்னும் சந்தர்ப்பம் கிடைக்கும். வெற்றி என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நேரத்தில் வரும். வெறுப்பையும் அன்பையும் பெற ஒரே ஒரு நொடி போதும். ஒருநாள் நான் உங்களிடம் இருந்தும் அன்பைம் பெறுவேன்” என கூறியுள்ளார். பிரச்சன்னாவின் இந்த மெச்சூரிட்டியான பதிலுக்கு பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
?? We have an important announcement regarding our #Kanaa tomorrow at 7 PM ??. Stay tuned to this space!
— Sivakarthikeyan Productions (@SKProdOffl) November 21, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments