அஜித் படத்தை மிஸ் செய்த நடிகருக்கு கிடைத்த தனுஷ் பட வாய்ப்பு

  • IndiaGlitz, [Saturday,February 08 2020]

அஜித் நடித்து வரும் ’வலிமை’ படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் பிரசன்னா பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாகவும் அதன் பின்னர் ஒரு சில காரணங்களால் அந்த படத்தில் அவரால் நடிக்க முடியவில்லை என்றும் கூறப்பட்டது

இந்த நிலையில் அஜித்தின் ’வலிமை’ படத்தை மிஸ் செய்த பிரசன்னாவுக்கு தற்போது தனுஷ் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. தனுஷ் நடிக்கவுள்ள 43வது படத்தில் முக்கிய கேரக்டரில் பிரசன்னா நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

‘துருவங்கள் 16’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அதன் பின் நரகாசுரன், மாபியா ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இந்த படத்தை இயக்கவுள்ளார். தனுஷ் மற்றும் பிரசன்னா இணைந்து நடிக்கும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகளை தற்போது கார்த்திக் நரேன் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.