2ஆம் பாகமாக உருவாகும் பிரசன்னாவின் வெற்றிப்படம்

  • IndiaGlitz, [Wednesday,February 13 2019]

பிரசன்னா, லைலா நடிப்பில் பிரியா இயக்கத்தில் பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் 'கண்ட நாள் முதல்'. பிரசன்னா, லைலா, கார்த்திக் குமார் என முக்கோண காதல் கதையான இந்த படம் ரொமான்ஸ் மற்றும் காமெடி காட்சிகளுடன் அமைந்து நல்ல வெற்றியை பெற்றது.

இந்த நிலையில் சமீபத்தில் பிரசன்னா, லைலா, இயக்குனர் பிரியா மற்றும் கார்த்திக் குமார் ஆகியோர் மீண்டும் சந்தித்து தாங்கள் பணிபுரிந்த 'கண்ட நாள் முதல்' படம் குறித்த மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டதாகவும், அதன்பின் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை விரைவில் தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் நடிகர் பிரசன்னா தனது சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கோலிவுட் திரையுலகில் தற்போது ரஜினி, கமல் படங்கள் முதல் சந்தானம் படம் வரை பல இரண்டாம் பாக படங்கள் உருவாகி வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் 'கண்ட நாள் முதல்' படத்தின் இரண்டாம் பாகம் உருவானால் அது பிரசன்னாவின் முதல் இரண்டாம் பாக படமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.