துல்கர் சல்மானுக்கு ஆதரவாக கருத்த தெரிவித்த தமிழ் நடிகர்
Send us your feedback to audioarticles@vaarta.com
மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடித்து தயாரித்த 'வரனே அவஷ்யமுண்டு' படத்தில் நாய்க்கு பிரபாகரன் என்று பெயர் வைத்தது சர்ச்சையானதால், தமிழ் மக்களிடம் துல்கர் சல்மான் மன்னிப்பு கேட்டுள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். அவர் மன்னிப்பு கேட்ட பின்னரும் பிரபாகரனின் ஆதரவாளர்கள் மிரட்டல் விடுத்தும், துல்கரின் குடும்பத்தையே இழுத்தும் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இதுகுறித்து தமிழ் நடிகர் பிரசன்னா தனது சமூக வலைத்தளத்தில் துல்கருக்கு ஆதரவாக சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். ’நம்ம ஊர்ல ‘ஆணியே புடுங்க வேணாம்’ மற்றும் ‘என்ன கொடுமை சரவணன் இது’ போன்ற பழைய படங்களில் வந்த வசனங்களை புதிய படங்களில் காமெடிக்கு பயன்படுத்துவது போல் பழைய மலையாள படம் ஒன்றில் வரும் நகைச்சுவை காட்சிதான் தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
அந்தப் பெயருக்குப் பின்னால் இருக்கும் உணர்வுகள் என்ன என்பது எனக்குப் புரிகிறது. ஆனால் தவறான புரிதலின் அடிப்படையில் வெறுப்பைப் பரப்ப வேண்டாம். மலையாள திரைப்படங்களைப் பார்த்திருக்கும் ஒரு தமிழனாக, அது எந்த அர்த்தத்தில் சொல்லப்பட்டது என்பது எனக்குப் புரிகிறது. தேவையில்லாத அவதூறுக்கும், தவறான புரிதலுக்கும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் துல்கர்” என்று பிரசன்னா கூறியுள்ளார். இதற்கு துல்கர் சல்மானும் நன்றி தெரிவித்துள்ளார்.
As a Tamil who's seen Malayalam movies I quiet understand the context, I sincerely apologize dear @dulQuer for the misunderstanding and all the unwarranted abuse. I see the name is used just like the line "ormayundo ee mukham" by Sureshgopi sir.
— Prasanna (@Prasanna_actor) April 26, 2020
Namma oorla like how we use "aaniye pudingavenam" or "enna koduma saravanan" the name is used from a famous old film dialog. Dear ppl i understand the sentiment involved with the name but let's not spread hate based on misunderstanding. https://t.co/JlmCWJgk74
— Prasanna (@Prasanna_actor) April 26, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments