பிரபல நடிகரின் முன்னாள் மனைவி வீட்டில் 170 சவரன் நகை திருட்டு
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னையில் நேற்று வளசரவாக்கத்தில் உள்ள வங்கி ஒன்றின் லாக்கர் உடைக்கப்பட்டு லட்சக்கணக்கான மதிப்புள்ள பணம், நகை கொள்ளை போன அதிர்ச்சியில் இருந்தே இன்னும் மீளாத நிலையில் இன்று பிரபல நடிகர் ஒருவரின் முன்னாள் மனைவி வீட்டில் 170 சவரன் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
பிரபல நடிகர் பிரசாந்தின் முன்னாள் மனைவி கிரகலட்சுமி. இவருடைய சகோதரர் நாகராஜ் என்பவர் சென்னை தி.நகரில் வசித்து வருகிறார். கிரகலட்சுமிக்கு என தனி அறை நாகராஜ் வீட்டின் எதிரே உள்ளது. தற்போது அடையாறு பகுதியில் வசித்து வந்தாலும் அவருடைய பணம், நகை ஆகியவை நாகராஜின் அறைக்கு எதிரே உள்ள அறையில் தான் இருந்தது.
இந்த நிலையில் நேற்றிரவு மர்மநபர்கள் சிலர் நாகராஜின் வீட்டில் நுழைந்து அவரது வீட்டிலும், கிரகலட்சுமியின் அறையிலும் இருந்த பணம், நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து நாகராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில் திநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் கிரகலட்சுமியின் 150 சவரன் நகையும், நாகராஜின் 20 சவரன் நகையும் திருடப்பட்டுள்ளதாக தெரிகிறது. மொத்தம் 170 சவரன் நகைகளை திருடிய கொள்ளையனுக்கு போலீசார் வலைவீசி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com