ஏழைகளுக்கு இலவசமாகக் கொரோனா தடுப்பூசி வழங்கிய சூர்யா, கார்த்தி பட நாயகி!

  • IndiaGlitz, [Thursday,June 17 2021]

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான “மாஸ்”, நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான “சகுனி” உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை பிரணிதா சுபாஷ். இவர் கொரோனா நேரத்தில் இவர் ஆக்சிஜன் சிலிண்டர்களை இலவசமாக வழங்குவது, ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்குவது எனப் பல்வேறு நிவாரணப் பொருட்களை வழங்கி வந்தார்.

அந்த வகையில் தற்போது பிரணிதா தனது அறக்கட்டளையில் பதிவு செய்துள்ள பல நூறு பேருக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசிகளை சொந்த செலவில் வழங்கியுள்ளார். இதற்காக பெங்களூருவில் உள்ள ஆர்.வி மருத்துவமனையில் முகாம் அமைத்து கொரோனா தடுப்பூசி வழங்கியுள்ளார். இதனால் நடிகை பிரணிதாவிற்கு அவரது ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

தெலுங்கு, இந்தி, கன்னடம் எனப் பல மொழிப்படங்களில் ரவுண்டு கட்டி நடித்துவரும் நடிகை பிரணிதா கடந்த 2011 ஆம் ஆண்டு நடிகர் அருள்நிதி நடிப்பில் உருவான “உதயன்” திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். சமீபத்தில் நடிகர் அதர்வா முரளியுடன் இணைந்து “ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்‘’ எனும் திரைப்படத்தில் நடித்து இருந்தார். இந்நிலையில் கடந்த மே 30 ஆம் தேதி இவருக்கு பெங்களூருவை சேர்ந்த தொழில் அதிபர் நிதின் ராஜுவுடன் திருமணம் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.