ஆட்டோ டிரைவர்களுக்கு உதவிய சூர்யா-கார்த்தி பட ஹீரோயின்

சூர்யா நடித்த ’மாஸ் என்ற மாசிலாமணி’ கார்த்தி நடித்த ’சகுனி’ உள்பட ஒருசில தமிழ் படங்களிலும் பல தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ப்ரணிதா சுபாஷ். இவர் இந்த கொரோனா விடுமுறையில் தனது சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது கொரோனா குறித்த விழிப்புணர்வு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் இவர் சமீபத்தில் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஆட்டோ டிரைவர்கள் சிலருக்கு சானிடைசர் மற்றும் மாஸ்குகள் உட்பட ஒரு சில பொருட்களை வழங்கி உதவி செய்துள்ளார். ஆட்டோ டிரைவர்ககளுக்கு தேவையான மாஸ்குகள், சானிடைசர் ஆகியவற்றை வழங்கியதோடு அவர்களுடைய ஆட்டோக்களுக்கு கிருமிநாசினி தெளிக்கவும் உதவி செய்துள்ளார்.

ஆட்டோ டிரைவர்களுக்கு நடிகை ப்ரணிதா உதவியுள்ளது குறித்து அப்பகுதி ஆட்டோ டிரைவர்கள் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்த தகவல் சமூக வலைதளங்களில் வீடியோக்களுடன் சமூக வலைத்தளங்களில் வெளியானதை அடுத்து நடிகை ப்ரணிதாவுக்கு நெட்டிசன்கள் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை ப்ரணிதா சுபாஷ் தற்போது இந்தியில் இரண்டு படங்களிலும் கன்னடத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

நடிகை அனுஷ்கா மீது மனித உரிமை கமிஷனிடம் புகார்: பெரும் பரபரப்பு

பிரபல பாலிவுட் நடிகையும் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட்கோலி மனைவியுமான அனுஷ்கா ஷர்மா மீது மனித உரிமை கமிஷனில் புகார் அளிக்கப்பட்டுள்ளதால் பாலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

தனக்கு நெருக்கமான முதல்வருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய கமல்ஹாசன்

உலகநாயகன் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கடந்த சில ஆண்டுகளாகவே மத்திய மாநில அரசுகள் மீது பாரபட்சமின்றி விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.

இளைஞர்கள் மனதில் விஷத்தை விதைக்க வேண்டாம்: கவுதம்மேனனுக்கு தமிழ் இயக்குனர் கோரிக்கை

பிரபல இயக்குனர் கவுதம்மேனன் சமீபத்தில் இயக்கிய 'கார்த்திக் டயல் செய்த எண்' என்ற குறும்படம் பெரும்பாலானோரால் வரவேற்பை பெற்று இணையதளங்களில் டிரண்ட் ஆகி வருகிறது

4 மண்டலங்களில் மட்டும் 5467, 2000ஐ நெருங்கிய ராயபுரம்: சென்னை கொரோனா நிலவரம்

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டிவிட்டது என்பதும் சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை

வெற்றிமாறன் படத்தில் ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, ராதாரவி: ரகசியத்தை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய 'பொல்லாதவன்' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதை அடுத்து இருவரும் மீண்டும் இணைந்த திரைப்படம் 'ஆடுகளம்'.