அப்போதும் இப்போதும் ராமர், ஹனுமன், தேசிய சின்னம்: நடிகர் பிரகாஷ்ராஜ் பதிவு

  • IndiaGlitz, [Thursday,July 14 2022]

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த ராமர், ஹனுமன் மற்றும் இந்தியாவின் தேசிய சின்னம் மற்றும் தற்போது இருக்கும் ராமர், ஹனுமன் மற்றும் தேசிய சின்னம் ஆகியவற்றின் வேற்றுமையை நடிகர் பிரகாஷ்ராஜ் ஒரு புகைப்படத்தின் மூலம் பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பிரதமர் மோடி புதிய பாராளுமன்றக் கட்டிடத்தின் மேற்கூரையில் தேசிய சின்னத்தை திறந்து வைத்தார். இந்த தேசிய சின்னத்திலுள்ள சிங்கங்கள் வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்டு இருந்தது. இந்த சின்னத்தை வடிவமைக்க முதலில் களிமண் மாடலிங் அதன்பிறகு கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் அதன்பிறகு வெண்கல வார்ப்பு எட்டு வெவ்வேறு நிலைகளில் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 6 மீட்டர் உயரமுள்ள இந்த சின்னத்தின் எடை 9500 கிலோ என்றும் இந்த வெண்கல சின்னத்தை தாங்கும் வகையில் 6000 கிலோ எடையுள்ள நான்கு எஃகு தூண்கள் நிறுவப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பாஜகவின் எதிர்ப்பு கருத்தை அவ்வப்போது பதிவு செய்து வரும் நடிகர் பிரகாஷ்ராஜ், பிரதமர் மோடி ஆட்சிக்கு வரும் முன் இருந்த ராமர், ஹனுமன் மற்றும் தேசிய சின்னத்தின் புகைப்படத்தையும், பிரதமர் மோடியின் ஆட்சியில் உள்ள ராமர், ஹனுமன் மற்றும் தேசிய சின்னத்தின் புகைப்படத்தையும் நடிகர் பிரகாஷ்ராஜ் பதிவு செய்துள்ளார்.

இதில் பாராளுமன்றத்தில் வைக்கப்படும் தேசிய சின்னம் வித்தியாசமான முறையில் இருப்பதை அவர் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவுக்கு ஏராளமான கமெண்ட்ஸ் பதிவாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.