ரஃபேல் புத்தகம் - மோடி திரைப்படம்: ஒப்பிடும் நடிகர் பிரகாஷ்ராஜ்
- IndiaGlitz, [Tuesday,April 02 2019]
எழுத்தாளர் எஸ்.விஜயன் எழுதிய ரஃபேல் ஊழல் குறித்த புத்தகம் இன்று சென்னையில் இந்து என்.ராம் அவர்களால் வெளியிட இருந்த நிலையில் திடீரென இந்த புத்தகத்திற்கு தமிழக தேர்தல் ஆணையம் தடை விதித்தது. இதனையடுத்து பறக்கும் படை அதிகாரிகள் புத்தகத்தை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து தலைமை தேர்தல் ஆணையரின் உத்தரவின்படி பறிமுதல் செய்த புத்தகங்கள் தற்போது திருப்பி ஒப்படைக்கப்பட்டு வருகிறது.
இந்த ரஃபேல் ஊழல் குறித்த புத்தகங்களுக்கு தடை விதிக்கும் தேர்தல் ஆணையம், பிரதமர் மோடி குறித்த திரைப்படமான பி.எம்.நரேந்திரமோடி திரைப்படத்திற்கு தடை விதிக்கவில்லை. அதேபோல் தேர்தல் அறிவிப்புக்கு பின்னர் நமோ டிவிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது எந்த வகையில் நியாயம் என நடிகர் பிரகாஷ்ராஜ் தனது சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரகாஷ்ராஜின் இந்த டுவீட்டுக்கு பெரும்பாலான நெட்டிசன்கள் ஆதரவு அளித்துள்ளனர். தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி நடந்து கொள்ள வேண்டும் என்றும் ஆளும்கட்சியின் கூட்டணியாக செயல்படக்கூடாது என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
சற்றுமுன் வந்த செய்தி: நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் புத்தக வெளியீட்டு விழாவிற்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது. திட்டமிட்டபடி மாலை 6.30 மணிக்கு தேனாம்பேட்டை பாரதி புத்தகாலயத்தில் வெளியீட்டு விழா நடைபெறுகிறது என பதிப்பகத்தார் தகவல் அளித்துள்ளனர்.