தமிழ் புரியாதவர்களுக்கு இந்த முக்கிய செய்தி: பிரகாஷ்ராஜ் பதிவு செய்த பரபரப்பு ட்விட்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் பிரகாஷ்ராஜ் மீது சுமத்தப்பட்ட மோசடி புகார் பொய்யானது என தமிழ் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ள நிலையில் தமிழ் புரியாதவர்களுக்காக என இந்த செய்தியை நடிகர் பிரகாஷ் ராஜ் தனது சமூக வலைதள பக்கத்தில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.
திருச்சி பிரணவ் ஜூவல்லர்ஸ் நகைக்கடையினர் சட்டவிரோதமான பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில் இந்த கடையின் விளம்பரத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் நடித்ததை அடுத்து இந்த மோசடியில் அவருக்கு தொடர்பு இருக்கலாம் என அமலாக்கத்துறை அவருக்கு சம்மன் அனுப்பியது.
நகை கடையின் உரிமையாளர்களிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்த வந்த நிலையில் தற்போது பிரகாஷ்ராஜுக்கும் இந்த மோசடிக்கும் தொடர்பு இல்லை என்றும் இந்த நிறுவனத்தின் விளம்பரத்தில் மட்டுமே அவர் நடித்ததாகவும், எந்த முதலீடும் செய்யவில்லை என்றும் தெரியவந்துள்ளது. எனவே பிரகாஷ் ராஜிடம் இது தொடர்பாக விசாரணை நடத்த போவதில்லை என்றும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
தமிழில் வெளியான இந்த செய்தியை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பிரகாஷ்ராஜ் தமிழ் புரியாதவர்களுக்காக ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து தனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.
For those who don’t understand Tamil
— Prakash Raj (@prakashraaj) December 15, 2023
BREAKING NEWS:-Official announcement of the Investigation team.
Actor prakash raj is not involved in any ponzi scam of tamilnadu s Pranav jewellers.. 🙏🏿🙏🏿🙏🏿
I thank everyone who trusted me and stood by me .. #SathyamevaJayathe #justasking pic.twitter.com/AZ6hLM8wjI
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com