பிரதமர் சொன்ன 150 என்ன ஆச்சு? நடிகர் பிரகாஷ்ராஜ் கேள்வி
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியா மட்டுமின்றி அண்டை நாடுகளும் எதிர்பார்த்த குஜராத் மாநிலத்தின் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி கொண்டிருக்கின்றது. தற்போதைய தகவலின்படி பாஜக 100க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னணியில் இருப்பதால் ஆறாவது முறையாக மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே பிரதமர் மோடிக்கும், பாஜகவுக்கும் எதிரான கருத்துக்களை கூறி வரும் நடிகர் பிரகாஷ்ராஜ், இந்த தேர்தல் முடிவு குறித்து தனது சமூகவலைத்தளத்தில் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். அவர் கூறியதாவது: பிரதமர் அவர்களே!, தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள். ஆனால் அதே நேரத்தில் உண்மையிலேயே நீங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளீர்களா? குஜராத்தில் 150-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என கூறியது என்ன ஆனது?
'பிரித்தாளும் அரசியல் இந்தியாவில் வேலை செய்யாது என்றும், பாகிஸ்தான், மதம், ஜாதி ஆகியவற்றை தாண்டியும் நாட்டில் மிகப்பெரிய பிரச்னைகள் இருப்பதாகவும் நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com