வரும் தேர்தலில் ரஜினி, கமல், விஷால் செய்ய வேண்டியது என்ன? பிரகாஷ்ராஜ்

  • IndiaGlitz, [Thursday,January 18 2018]

கடந்த சில மாதங்களாகவே அரசியல் குறித்து பரபரப்பான கருத்துக்களை தெரிவித்து வருபவர் நடிகர் பிரகாஷ்ராஜ். குறிப்பாக பிரதமர் மோடியை நேரடியாக தாக்கி பிரகாஷ்ராஜ் விமர்சனம் செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில் ஐதரபாத்தில் நடைபெற்ற இந்தியா டுடே குழுமத்தின் கருத்தரங்கில் கலந்து கொண்டு பிரகாஷ்ராஜ் பேசியதாவது: தமிழகத்தில் ஆட்சி மாற்றம், அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டுமென மக்கள் விரும்புகிறார்கள். ரஜினி, கமல் மற்றும் விஷால் ஆகியோர் அரசியலுக்கு வந்துள்ளதை வரவேற்கிறேன். கண்டிப்பாக இவர்களால் மக்கள் விரும்புவதை கொடுக்க முடியும் என நான் நம்புகிறேன்.

என்னை பொறுத்தவரை இவர்கள் மூவரின் கொள்கை என்பது மக்களுக்கு நன்மை செய்ய வேண்டுமென்பதாகவே இருக்கிறது. எனவே தேர்தலை சந்திக்கும் போது மூவரும் இணைந்து செயல்பட வேண்டும். குறிப்பாக மக்கள் எப்போதும் கேள்வி கேட்காமல் வாக்களிப்பவர்களாக உள்ளார்கள். யார் தேர்தலில் நின்றாலும் மக்கள் கேள்வி கேட்க வேண்டும். அப்பொழுதுதான் தேவையானவற்றை பெற முடியும். நன்மை செய்யும் தலைவர்களை அடையாளம் காண முடியும்” என்று கூறினார்.

More News

என்ன புரட்சி செய்கிறார்கள் என்று பார்க்கலாம்: கமல்-ரஜினியை கிண்டல் செய்த வைகோ

ரஜினிக்கும் கமலுக்கும் கடந்த சில மாதங்கள் வரை ஆதரவு கொடுத்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தற்போது இருவரது அரசியல் நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களிடம் கிண்டலாக பதிலளித்துள்ளார்.

10 நிமிடம் தாமதம் ஒரு குற்றமா? ஆசிரியர் தண்டனையால் பலியான சென்னை மாணவன்

சென்னை பெரம்பூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 10ஆம் படிக்கும் மாணவர் ஒருவர் பள்ளிக்கு பத்து நிமிடங்கள் தாமதமாக வந்ததால் ஆசிரியர் கொடுத்த தண்டனையின் காரணமாக பரிதாபமாக பலியானார்

வைரமுத்து நாக்கை அறுத்தால் 10 கோடி ரூபாய்: முன்னாள் அமைச்சரின் சர்ச்சை பேச்சு

வைரமுத்து சமீபத்தில் நடந்த ஒரு கருத்தரங்கில் ஆண்டாள் குறித்து பேசிய கருத்து சர்ச்சைக்குரியது என்றால் அதைவிட சர்ச்சைக்குரிய கருத்துக்களை அவரது எதிர்ப்பாளர்கள் கூறி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கமல் அறிவிப்பு குறித்து அப்துல்கலாம் பேரன் தெரிவித்த கருத்து

உலக நாயகன் கமல்ஹாசன் தனது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வரும் பிப்ரவரி 21ஆம் தேதி அறிவித்துவிட்டு அன்றைய தினமே மக்களை சந்திக்கவிருப்பதாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

கலாம் இல்லத்தில் இருந்து கமல் தொடங்கும் கனவுப்பயணம்

உலக நாயகன் கமல்ஹாசன் தனது அரசியல் கட்சியின் பெயரை வரும் பிப்ரவரி 21ஆம் தேதி அறிவிக்கவுள்ளதாக தெரிவித்தது குறித்து நேற்று பார்த்தோம்.