தாய்ப்பாலும் நதிநீரும் ஒன்றுதான்: காவிரி விவகாரம் குறித்து பிரபல நடிகர்
Send us your feedback to audioarticles@vaarta.com
காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும் என்று தமிழகத்தில் அரசியல் கட்சிகளும், விவசாய அமைப்புகளும் பொதுமக்களும், மாணவர்களும் கடந்த சில நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில் காவிரி மேலாண்மை அமைக்க கூடாது என கர்நாடக விவசாயிகளும், அரசியல் கட்சிகளும் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர். மத்திய அரசோ, கர்நாடக மாநில தேர்தல் முடியும்வரை இந்த பிரச்சனையை ஒத்தி போட முடிவு செய்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்
இந்த நிலையில் காவிரி நதிநீரை வைத்து இருமாநில அரசியல்வாதிகளும் அரசியல் செய்து வருவதாகவும், இந்த பிரச்சனையால் தான் இரு மாநில அரசியல்வாதிகளின் பிழைப்பு நடந்து கொண்டு இருப்பதால் காவிரி பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட வாய்ப்பே இல்லை என்றும் நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்
இதுகுறித்து தமிழக, கர்நாடக மக்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், 'காவிரி நீரை வைத்து விவசாயிகள் வாழ்ந்து வந்தார்கள்; இப்போது அரசியல்வாதிகள் அதில் தான் பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கிறார்கள். ஒரு நதிநீரை குடித்து அதில் விவசாயம் செய்து வாழ்ந்த மக்கள் சண்டையிட்டு கொள்வது முறையல்ல. தாய்ப்பாலும் நதிநீரும் வேறு வேறு அல்ல, நதி நீரிலிருந்து அரசியலை அகற்றுங்கள், அப்போதுதான் இந்த பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும் என்று கூறியுள்ளார். பிரகாஷ்ராஜின் இந்த கருத்துக்கு ஆதரவு குவிந்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments