டெல்லி முதல்வரை சந்தித்த பிரபல தமிழ் நடிகர்

  • IndiaGlitz, [Thursday,January 10 2019]

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களை நடிகர் பிரகாஷ்ராஜ் இன்று சந்தித்துள்ளார்

கர்நாடக மாநிலத்தில் உள்ள மத்திய பெங்களூர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட போவதாக நடிகர் பிரகாஷ்ராஜ் சமீபத்தில் அறிவித்தார். அவருக்கு கமல்ஹாசன், ஜிக்னேஷ் மேவானி உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் இன்று டெல்லி சென்ற பிரகாஷ்ராஜ் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களை சந்தித்து பேசியுள்ளார். பிரகாஷ்ராஜ் வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்தவுடன் வாழ்த்து தெரிவித்தவர்களில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரகாஷ்ராஜ் போட்டியிடும் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி ஆதரவு அளிக்கும் என அறிவித்துள்ளது. இதனையடுத்து பிரகாஷ்ராஜ், அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.