கொரோனா விவகாரம்: பிரகாஷ்ராஜ் செய்த பிரமாதமான செயல்

கொரோனா அச்சம் காரணமாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் இன்று இரண்டாவது நாளே ஏழை எளியவர்களின் வீடுகளில் அடுப்பு எரியாமல் பட்டினி கிடக்க ஆரம்பித்துவிட்டனர். பணக்காரர்கள் தங்கள் வீட்டை பூட்டி கொண்டு, இருக்கும் உணவை உண்டு, மகிழ்ச்சியாக குடும்பத்துடன் பொழுதை போக்கி கொண்டிருக்கும் நிலையில் ஏழை எளியவர்கள், அன்றாடம் காய்ச்சிகள், தினக்கூலி பெறுபவர்களின் நிலை பெரும் சிக்கலில் உள்ளது

இந்த நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் தன்னால் இயன்ற உதவியை அவரிடம் வேலை பார்க்கும் அனைவருக்கும் செய்துள்ளார். தன்னுடைய பண்ணையில் வேலை பார்க்கும் அனைவருக்கும் மே மாதம் வரையிலான சம்பளத்தை அட்வான்சாக கொடுத்து விட்டதாகவும் மேலும் தான் நடித்துக்கொண்டிருக்கும் மூன்று திரைப்படங்களில் பணிபுரிந்து கொண்டிருக்கும் தொழிலாளர்களுக்கும் அட்வான்ஸ் சம்பளத்தையும் அவர் கொடுத்து வருவதாகவும் கூறியுள்ளார் இன்னும் தன்னால் முயன்ற உதவி செய்ய முடிவு செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேபோல் ஒவ்வொருவரும் தாங்கள் நடித்துக்கொண்டிருக்கும் படங்களில் பணிபுரிவோருக்கு அட்வான்ஸாக பணம் கொடுத்து இந்த நேரத்தில் உதவ வேண்டும் என்றும் அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே இந்த கொரோனாவில் இருந்து அனைவரும் தப்பிக்க முடியும் என்றும் கூறியுள்ளார்

கொரானாவில் இருந்து மக்களின் உயிரை காப்பாற்றி, பசிக்கு மக்களின் உயிரை பலி கொடுத்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார் பிரகாஷ்ராஜின் இந்த பிரமாதமான செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்