ஜிக்னேஷூக்கு பிரகாஷ்ராஜ் கூறிய நடிப்பு டிப்ஸ்

  • IndiaGlitz, [Tuesday,January 30 2018]

கடந்த சில மாதங்களாக பாரத பிரதமர் நரேந்திரமோடியை கடுமையாக விமர்சித்து வருபவர் நடிகர் பிரகாஷ்ராஜ். குறிப்பாக பிரதமர் மோடி தன்னைவிட சிறந்த நடிகர் என்று அவர் கூறிய விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது.

அதேபோல் சமீபத்தில் குஜராத் சட்டமன்ற தேர்தலில் சுயேட்சையாக வெற்றி பெற்ற ஜிக்னேஷூம் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து வருபவர்களில் ஒருவர்.

இந்த நிலையில் சமீபத்தில் பிரகாஷ்ராஜ்-ஜிக்னேஷ் சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பில் தனக்கு நடிப்பதற்கு சில டிப்ஸ் கொடுங்கள் என்று ஜிக்னேஷ், பிரகாஷ்ராஜிடம் கேட்டதாகவும், அதற்கு பிரகாஷ்ராஜ், 'என்னை விட நாட்டின் பிரதமர் நல்ல டிப்ஸ் கொடுப்பார்'' என்று கூறியதாகவும், ஜிக்னேஷ் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். ஏற்கனவே ஜிக்னேஷும் இந்த நூற்றாண்டில் இந்தியாவின் சிறந்த நடிகராக பிரதமர் மோடி தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது என்று பிரதமரை விமர்சனம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பார்த்திபன் மகள் கீர்த்தனா திருமண தேதி அறிவிப்பு

இயக்குனர், நடிகர் பார்த்திபனின் மகளும், மணிரத்னம் இயக்கிய 'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தேசிய விருது பெற்றவருமான கீர்த்தனாவின் திருமண தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ராணி பத்மினி யார் என்றே எனக்கு தெரியாது: தீபிகா படுகோனே

சஞ்சய் லீலா பன்சாலி நடிப்பில் தீபிகா படுகோனே நடித்த 'பத்மாவத்' திரைப்படம் மிகப்பெரிய போராட்டத்திற்கு பின் கடந்த வாரம் வெளியானது. நான்கு மாநிலங்களில் இந்த படம் வெளிவரவில்லை

தமிழ்ப்புத்தாண்டு பார்ட்டி வைப்பாரா வெங்கட்பிரபு?

வெங்கட்பிரபு இயக்கி வரும் 'பார்ட்டி' திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் வரும் தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாக

ரஜினி, கமலை அடுத்து லைகாவுடன் கைகோர்க்கும் பிரபல இயக்குனர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள '2.0' படத்தை சுமார் ரூ.450 கோடியில் தயாரித்துள்ள லைகா, நிறுவனம் இந்த படத்தை வரும் ஏப்ரலில் வெளியிட திட்டமிட்டுள்ளது.

பாகிஸ்தானை பந்தாடிய இளம் இந்திய அணிக்கு கிரிக்கெட் ஜாம்பவான் வாழ்த்து

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய அரையிறுதி போட்டி நடைபெற்றது.