ஜிக்னேஷூக்கு பிரகாஷ்ராஜ் கூறிய நடிப்பு டிப்ஸ்

  • IndiaGlitz, [Tuesday,January 30 2018]

கடந்த சில மாதங்களாக பாரத பிரதமர் நரேந்திரமோடியை கடுமையாக விமர்சித்து வருபவர் நடிகர் பிரகாஷ்ராஜ். குறிப்பாக பிரதமர் மோடி தன்னைவிட சிறந்த நடிகர் என்று அவர் கூறிய விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது.

அதேபோல் சமீபத்தில் குஜராத் சட்டமன்ற தேர்தலில் சுயேட்சையாக வெற்றி பெற்ற ஜிக்னேஷூம் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து வருபவர்களில் ஒருவர்.

இந்த நிலையில் சமீபத்தில் பிரகாஷ்ராஜ்-ஜிக்னேஷ் சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பில் தனக்கு நடிப்பதற்கு சில டிப்ஸ் கொடுங்கள் என்று ஜிக்னேஷ், பிரகாஷ்ராஜிடம் கேட்டதாகவும், அதற்கு பிரகாஷ்ராஜ், 'என்னை விட நாட்டின் பிரதமர் நல்ல டிப்ஸ் கொடுப்பார்'' என்று கூறியதாகவும், ஜிக்னேஷ் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். ஏற்கனவே ஜிக்னேஷும் இந்த நூற்றாண்டில் இந்தியாவின் சிறந்த நடிகராக பிரதமர் மோடி தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது என்று பிரதமரை விமர்சனம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.