நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டி: பிரபல தமிழ் நடிகர் அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகில் இருந்து ஏற்கனவே கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்பட பல பிரபலங்கள் அரசியலில் குதித்துள்ளனர். ரஜினிகாந்த் வரும் சட்டசபை தேர்தலை குறி வைத்து அரசியல் காய்களை நகர்த்தி வரும் நிலையில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் என்று கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் தமிழ் திரையுலகின் முக்கிய நடிகர்களில் ஒருவராகிய பிரகாஷ்ராஜ், தான் நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கவுள்ளதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளார்.
எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்ட பிரகாஷ்ராஜ், மக்களின் ஆதரவுடன் நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட போவதாகவும், போட்டியிடும் தொகுதி குறித்த அறிவிப்பை விரைவில் அறிவிக்கவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே சமீபத்தில் நடைபெற்ற கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்த பிரகாஷ்ராஜ், அனேகமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
HAPPY NEW YEAR TO EVERYONE..a new beginning .. more responsibility.. with UR support I will be contesting in the coming parliament elections as an INDEPENDENT CANDIDATE. Details of the constituency soon. Ab ki baar Janatha ki SARKAR #citizensvoice #justasking in parliament too..
— Prakash Raj (@prakashraaj) December 31, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments