நடிகர் பிரகாஷ்ராஜ் போட்டியிடும் தொகுதி இதுதான்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் வரும் பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுவதாக சமீபத்தில் அறிவித்தார். அவருடைய இந்த அறிவிப்புக்கு சமூக வலைத்தளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த நிலையில் தான் போட்டியிடுவதாக அறிவித்த அறிவிப்புக்கு பெரும் ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ள பிரகாஷ்ராஜ், வரும் பாராளுமன்ற தேர்தலில் கர்நாடக மாநிலத்தில் உள்ள மத்திய பெங்களூர் தொகுதியில் சுயேட்சை போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். இன்னும் ஒருசில நாட்களில் இதுகுறித்த கூடுதல் விபரங்களை தெரிவிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்பதுதான் பிரகாஷ்ராஜின் இலக்கு என்பதால் இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி உள்பட மற்ற கட்சிகள் பிரகாஷ்ராஜூக்கு ஆதரவு கொடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இந்த தொகுதியில் தற்போது பாஜகவை சேர்ந்த பிசி மோகன் எம்பியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#2019 PARLIAMENT ELECTIONS.Thank you for the warm n encouraging response to my new journey.. I will be contesting from BENGALURU CENTRAL constituency #KARNATAKA as an INDEPENDENT..will share the Details with the media in few days..#citizensvoice #justasking in parliament too... pic.twitter.com/wJN4WaHlZP
— Prakash Raj (@prakashraaj) January 5, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments