டெல்லி மக்கள் துடைப்பத்தால் அடித்துள்ளார்கள்: பாஜக தோல்வி குறித்து பிரபல நடிகர்
Send us your feedback to audioarticles@vaarta.com
டெல்லியில் கடந்த 8ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வந்தன. இந்த தேர்தலின் முதல் முடிவுகளிலிருந்து அம்மாநிலத்தை ஆளும் கட்சியான ஆம் ஆத்மி கட்சி முன்னிலையில் இருந்து வருகிறது.
தற்போது ஆம் ஆத்மி கட்சி 57 இடங்களிலும், பாரதிய ஜனதா கட்சியை 13 இடங்களிலும் முன்னிலை பெற்று வருகின்றது. தேசிய கட்சியான காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட முன்னிலை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கூறப்பட்டிருந்த கருத்துக் கணிப்பின்படி ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சியை தொடர உள்ளது என்பதும் அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மூன்றாவது முறையாக முதல்வர் பதவியை ஏற்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் டெல்லியில் ஆம் ஆத்மியின் வெற்றி குறித்து கருத்து கூறிய நடிகர் பிரகாஷ்ராஜ், ‘துப்பாக்கியால் சுட சொன்னவர்களுக்கு துடைப்பத்தால் டெல்லி மக்கள் பதிலடி கொடுத்து இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார். பாஜக பிரமுகர்கள் டெல்லியில் தேர்தல் பிரசாரம் செய்யும்போது சிஏஏ சட்டத்துக்கு எதிராக போராட்டம் செய்பவர்களை சுடவேண்டும் என்று பேசினார்கள் என்பதும், ஆம் ஆத்மி கட்சியின் சின்னம் துடைப்பம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com