'தளபதி 66': 12 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் விஜய்யுடன் இணையும் பிரபல நடிகர்!

  • IndiaGlitz, [Wednesday,October 06 2021]

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 66வது திரைப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க உள்ளார் என்பதும் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்க உள்ளார் என்பதும் தெரிந்ததே.

இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கும் நாயகி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்க இருப்பதாக அவரே பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அதில் ரஜினியுடன் நடித்து வருகிறேன், சூர்யாவுடன் நடித்து வருகிறேன், விஜய்யுடன் நடிக்கவுள்ளேன்’ என்று கூறியதிலிருந்து விஜய்யின் அடுத்த படத்தில் அவர் நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான ’வில்லு’ என்ற திரைப் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்த பிரகாஷ்ராஜ் அதன்பின் 12 ஆண்டுகள் கழித்து தற்போது தான் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே விஜய்யுடன் இணைந்து ’கில்லி’ ’போக்கிரி’ ’நேருக்கு நேராக’ ’ஆதி’ ’சிவகாசி’ உள்பட ஒருசில படங்களில் விஜய்யுடன் பிரகாஷ்ராஜ் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.