11ஆம் ஆண்டு திருமண நாளில் பிரகாஷ்ராஜின் நெகிழ்ச்சியான பதிவு!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் பிரகாஷ்ராஜ் தனது சமூக வலைத்தளத்தில் தனது 11ஆம் ஆண்டு திருமண நாள் குறித்து நெகிழ்ச்சியுடன் செய்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
இயக்குனர் இமயம் கே பாலச்சந்தர் இயக்கிய ’டூயட்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான பிரகாஷ்ராஜ், அதன்பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்பட பல திரைப்படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் கடந்த 2010ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி நடன இயக்குனர் போனி வர்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும், இந்த தம்பதிக்கு வேதாந்த் என்ற மகன் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பிரகாஷ்ராஜ் தனக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆனதை அடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் ஒரு பதிவு செய்துள்ளார். அதில் என்னுடன் 11 ஆண்டு காலம் பயணம் செய்த என்னுடைய அன்பு மனைவிக்கு நன்றி. ஒரு அருமையான நண்பனாகவும் காதலியாகவும் இருக்கும் அவர், என்னுடன் வாழ்க்கையில் ஒன்றாக பயணம் செய்து வருகிறார் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த டுவிட் போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ரசிகர்கள் அவருக்கு திருமண நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பிரகாஷ்ராஜ் தற்போது மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’, சூப்பர் ஸ்டார் ரஜினியின் ’அண்ணாத்த’, விஷாலின் ‘எனிமி’, அல்லு அர்ஜுனின் ’புஷ்பா’, யாஷ் நடித்துள்ள ‘கேஜிஎப் சாப்டர் 2’ மகேஷ்பாபுவின் ’சர்காரி வாரி பாட்டா’ உட்பட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
“It turned out so right.. for strangers in the night” .. thank you my darling wife .. for being a wonderful friend.. a lover and a great co traveller in our life together..?????? #happyweddinganniversary @PonyPrakashraj pic.twitter.com/xPVZb6Ibb9
— Prakash Raj (@prakashraaj) August 24, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments