2 வருடங்களுக்கு பின் மீண்டும் பிரகாஷ்ராஜின் புதிய முயற்சி

  • IndiaGlitz, [Thursday,June 23 2016]

கே.பாலசந்தரின் பள்ளியில் இருந்து வந்த ஏராளமான நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் பிரகாஷ்ராஜ். அவர் சிறந்த குணசித்திர மற்றும் வில்லன் நடிகராக விளங்கி வரும் நிலையில் மொழி, அபியும் நானும், பயணம், தோனி உள்பட பல திரைப்படங்களை தயாரித்துள்ளார்.
சினேகா நடித்த 'உன் சமையலறையில்' படத்திற்கு பின்னர் கடந்த இரண்டு ஆண்டுகளாக திரைப்படங்கள் தயாரிக்காமல் நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வந்த பிரகாஷ்ராஜ் தற்போது ஒரு கன்னட படம் ஒன்றை தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
Godhi Banna Sadharna Mykattu என்ற டைட்டிலில் வெளியான சூப்பர் ஹிட் கன்னட படத்தின் தமிழ், மற்றும் தெலுங்கு ரீமேக் உரிமையை பெற்றுள்ள பிரகாஷ்ராஜ், இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் இயக்குனர் உள்பட மற்ற தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.