சிவகார்த்திகெயன் - மோகன் ராஜா படத்தில் இணைந்த பிரபல நடிகர்

  • IndiaGlitz, [Wednesday,September 21 2016]

சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள 'ரெமோ' படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த படம் வரும் அக்டோபர் 7ஆம் தேதி பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் மோகன் ராஜா இயக்கத்தில் 24ஏஎம் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்பதையும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கவுள்ளார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
இந்நிலையில் தற்போது இந்த படத்தில் நடிக்க பிரகாஷ்ராஜ் ஒப்பந்தமாகியுள்ளார். இவருடைய இணைப்பு இந்த படத்தின் எதிர்பார்ப்பை மிகப்பெரிய அளவில் உயர்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடந்து வருவதாகவும் மிக விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

More News

'ரெமோ'வின் கேரக்டர்கள் குறித்த முக்கிய தகவல்

சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ் நடிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கிய 'ரெமோ' படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு...

சூர்யாவின் 'எஸ்3' படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடும் பிரபல நடிகை

சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் நடித்து வரும் 'எஸ்3' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது...

சூர்யாவின் '24' படத்திற்கு கிடைத்த சர்வதேச பெருமை

சூர்யா, சமந்தா நடிப்பில் விக்ரம்குமார் இயக்கிய '24' திரைப்படம் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்று வசூலை அள்ளியது என்பது அனைவரும் அறிந்ததே...

ஏ ஆர் முருகதாஸ் படத்தின் படப்பிடிப்பிற்காக - சென்னையில் மகேஷ் பாபு

தென்னிந்தியாவின் மிக அழகான நடிகரும் தெலுங்கு சூப்பர் ஸ்டாருமான மகேஷ்பாபுவும், இந்தியாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவருமான ஏ.ஆர்.முருகதாஸ்...

விஜய் நடனத்தை முயற்சி செய்த விக்ரம்

சீயான் விக்ரம் நடித்த 'இருமுகன்' திரைப்படம் கடந்த 8ஆம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது...