ஏழை மாணவியின் வாழ்க்கையை மாற்றிய தமிழ் நடிகர்: குவியும் வாழ்த்துக்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஏழை மாணவி ஒருவரின் இங்கிலாந்து படிப்புக்கு முழு செலவையும் தமிழ் நடிகர் ஒருவர் ஏற்றிருந்த நிலையில் அந்த மாணவி தற்போது பட்டம் பெற்றுள்ளார். இதுகுறித்த தகவல் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
தந்தை இல்லாத ஏழை மாணவி ஸ்ரீ சந்தனா என்பவருக்கு இங்கிலாந்து சென்று படிக்க அனுமதி கிடைத்தது. ஆனால் அவருக்கு இங்கிலாந்து செல்லும் அளவிற்கு வசதி இல்லாத நிலை இருந்தது. இது குறித்து தகவலை இயக்குனர் நவீன் மூலம் கேள்விப்பட்ட நடிகர் பிரகாஷ்ராஜ் மாணவி ஸ்ரீசந்தனா இங்கிலாந்து படிப்பை முடிப்பதற்கான முழு செலவையும் ஏற்றுக்கொண்டார்.
தற்போது இங்கிலாந்து படிப்பை முடித்துள்ள ஸ்ரீசாந்தனாவுக்கு வேலையும் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த தகவலை இயக்குனர் நவீன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அதற்கு பதிலளித்த பிரகாஷ்ராஜ், ‘மிகவும் சந்தோஷம் என்றும், அனைவரும் ஒன்று சேர்ந்தால் மட்டுமே இதுபோன்ற உதவி செய்ய வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார். ஏழை மாணவியின் வாழ்க்கையை மாற்றி இங்கிலாந்து படிப்புக்கு உதவி செய்த பிரகாஷ்ராஜ்க்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
Thank you too @NaveenFilmmaker for bringing my attention to this. It’s a joy when many hands join together to make a difference..stay blessed.. “the joy of empowering” #bliss https://t.co/TnFziFUO51
— Prakash Raj (@prakashraaj) December 15, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments