close
Choose your channels

மகனின் ஆசைக்காக மீண்டும் திருமணம் செய்துகொண்ட பிரபல நடிகர்… வைரல் புகைப்படம்!

Wednesday, August 25, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி எனப்பல மொழி சினிமாக்களில் சிறந்த குணச்சித்திர நடிகராகவும் துணை நடிகராகவும் வலம்வருபவர் நடிகர் பிரகாஷ்ராஜ். நடிப்பைத் தவிர பட இயக்கம் மற்றும் தயாரிப்பிலும் இவர் அவ்வபோது கவனம் செலுத்தி வருகிறார்.

நடிகர் பிரகாஷ் ராஜ் முதல்முதலில் இயக்குநர் சிகரம் பாலச்சந்தர் உருவாக்கிய “டூயட்” திரைப்படத்தில் அறிமுகமானவர். தன்னுடைய ஆரம்ப சினிமா வாழ்க்கையில் மிகுந்த சிரமங்களை அனுபவித்த இவர் தனக்கு பக்கபலமாக இருந்த லலிதா குமாரை காதலித்து கடந்த 1994 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு 2 அழகான மகள்கள் உள்ள நிலையில் இருவரும் கடந்த 2009 ஆம் ஆண்டு முறைப்படி விவகாரத்துப் பெற்றனர்.

அடுத்து நடிகர் பிரகாஷ் ராஜ் போனி வர்மாவை காதலித்து கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு வேதாந்த் என்ற மகன் உள்ளார். நேற்று தங்களுடைய 11 ஆவது திருமண விழாவை கொண்டாடிய நடிகர் பிரகாஷ் ராஜ்- போனி வர்மா ஜோடி செல்ல மகனின் ஆசையை நிறைவேற்றுவதற்காக மீண்டும் மோதிரம் அணிந்து திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இதுகுறித்து பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ் உங்கள் திருமணத்தைப் பார்க்க வேண்டும் என்று மகன் வேதாந்த் கூறியதாகவும் அதனால் மோதிரம் மாற்றிக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். இந்தப் புகைப்படங்களை டிவிட்டரில் பகிர்ந்துகொண்ட நடிகர் பிரகாஷ் ராஜ் அன்பான தோழியாகவும் வாழ்க்கைத் துணையாகவும் இருந்துவரும் போனி வர்மாவிற்கு நன்றியும் கூறியுள்ளார்

மேலும் இந்தப் புகைப்படங்களில் இருக்கும் இன்னொரு விசேஷம் நடிகர் பிரகாஷ் ராஜின் இரண்டு மகள்களும் இந்தப் புகைப்படங்களில் இடம் பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் போனி வர்மாவின் மகன் வேதாந்தும் தன்னுடைய சகோதரிகளுடன் மிகவும் அன்பாகவே நடந்துகொள்வதையும் பார்க்க முடிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment