நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அறுவை சிகிச்சை… விபத்து காரணமா என ரசிகர்கள் பதற்றம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி எனப்பல மொழிகளில் தனது நடிப்புத் திறமையால் மிரட்டி வருபவர் நடிகர் பிரகாஷ் ராஜ். இவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், சறுக்கி விழுந்ததால் சிறுகாயம் ஏற்பட்டு இருப்பதாகவும் அதனால் அறுவை சிகிச்சைக்காக பெங்களூரு செல்ல உள்ளதாகவும் தெரிவித்து இருக்கிறார்.
மேலும் பயப்படும் அளவிற்கு இது பெரிய காயம் இல்லை என்பதையும் அவர் தெரிவித்து இருக்கிறார். இந்நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜுவிற்கு நடந்தது என்ன என்பதுபோன்ற பதற்றம் ரசிகர்களிடையே ஏற்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் நேற்று தன்னுடைய வீட்டில் இருந்தபோது சறுக்கி விழுந்ததாகவும் இதனால் சிறுகாயம் ஏற்பட்டு சென்னை தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை எடுத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் கை தோள்பட்டையில் சிறிய எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதால் அவர் ஹைத்ராபாத்தில் உள்ள தனது மருத்துவ நண்பரிடம் அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருக்கிறார் என்பது போன்ற தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இந்நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் இயக்குநர் சிறுத்தை சிவாவின் “அண்ணாத்த“, பிரஷாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் “கேஜிஎஃப் 2” மணிரத்னம் இயக்கத்தில் “பொன்னியின் செல்வன்“ அல்லு அர்ஜுனின் “புஷ்பா“ கார்த்திக் நரேனின் “மாறன்”, மித்ரன் ஜவகர் இயக்கத்தில் “திருச்சிற்றம்பலம்“ உள்ளிட்ட படங்களில் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
A small fall.. a tiny fracture.. flying to Hyderabad into the safe hands of my friend Dr Guruvareddy for a surgery. I will be fine nothing to worry .. keep me in your thoughts ????????????
— Prakash Raj (@prakashraaj) August 10, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments