நடிகர் பிரகாஷ்ராஜூக்கு கிடைத்த பதவி உயர்வு
- IndiaGlitz, [Wednesday,February 03 2016]
பிரபல குணசித்திர மற்றும் வில்லன் நடிகர் பிரகாஷ்ராஜ், இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரின் பள்ளியில் இருந்து வந்த மாணவர். கே.பாலசந்தரின் 'டூயட்' என்ற படத்தின் மூலம் அறிமுகமான பிரகாஷ்ராஜ், அதன்பின்னர் பல வெற்றி படங்களில் தனக்கென ஒரு பாணி அமைத்து தன்னுடைய நடிப்பு முத்திரையை பதித்தவர்.
கடந்த 1994 ஆம் ஆண்டு நடிகை லலிதகுமாரியை திருமணம் செய்த பிரகாஷ்ராஜ், பின்னர் கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பாலிவுட் டான்ஸ் மாஸ்டர் போனிவர்மாவை கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் செய்தார்.
இந்நிலையில் பிரகாஷ்ராஜ்-போனிவர்மா தம்பதிக்கு இன்று ஆண்குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து பிரகாஷ்ராஜ் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் நானும் எனது மனைவி போனிகபூரும் வாழ்ந்த மகிழ்ச்சியான வாழ்வில் ஒரு அன்பான ஆண்குழந்தை இன்று இணைந்துள்ளது. அந்த குழந்தைக்கு உங்கள் அனைவரின் ஆசிர்வாதம் தேவை' என்று பதிவு செய்துள்ளார். தந்தையாக மீண்டும் பதவியுயர்வு பெற்றுள்ள பிரகாஷ்ராஜூக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.