இந்த படத்தில் நடித்ததை பெருமையாக கருதுகிறேன்: பிரகாஷ்ராஜ்
- IndiaGlitz, [Saturday,December 23 2017]
தமிழ் திரையுலகில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் கலக்கி வருபவர் நடிகர் பிரகாஷ்ராஜ். நேற்று வெளியான 'வேலைக்காரன்' படத்திலும் இவரது நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. இந்த நிலையில் இன்னொரு முக்கிய படமான 'டிராபிக் ராமசாமி' வாழ்க்கை வரலாறு படத்தில் பிர்காஷ்ராஜ் சக்தி வாய்ந்த அதிரடியான போலீஸ் கமிஷ்னராக நடிக்கிறார்
இந்த படத்தில் நடிப்பது குறித்து பிரகாஷ்ராஜ் கூறும் போது ” வாழ்ந்து கொண்டு இருக்கும் ஒரு சமூகப் போராளியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்தப் படத்தில் நான் நடித்ததை மிகுந்த பெருமையாக கருதுகிறேன்.” என்று குறிப்பிட்டார். இந்த படத்தில் பிரகாஷ்ராஜ் காட்சிகள் படத்திற்குப் பெரும் பலமாக இருக்கும் ” என்று இயக்குநர் விஜய் விக்ரம் தெரிவித்துள்ளார்
இந்த படத்தில் டிராபிக் ராமசாமியாக இயக்குநரும் தளபதி விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் நடித்துக்கொண்டு இருக்கிறார். அவருடைய மனைவியாக ரோகினி நடிக்கிறார் . இவர்களுடன் ஆர்.கே.சுரேஷ், உபாசனா, இமான் அண்னாச்சி, அம்பிகா, சார்லஸ் வினோத், மோகன்ராம், தரணி, சேத்தன், அம்மு, பேபி ஷெரின், விஜய் ஆண்டனி, எஸ்.வி.சேகர், கஸ்தூரி, மனோபாலா, மதன்பாபு உள்பட பலர் நடித்து வருகின்றனர்.